December 12, 2025, 2:04 PM
28.7 C
Chennai

கணவன் மனைவி தகராறு்; புதுப்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

sangeetha photo - 2025

திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெள்ளக்கல் ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா.

இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், வீரபுத்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் மது அருந்தி வீட்டுக்கு வந்து மனைவி சங்கீதாவிடம், அடிக்கடி உன் தாய் வீட்டிற்கு சென்று நகை, பணம், மற்றும் டூவிலர் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள வீரபத்திரனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சங்கீதா சடலமாக கிடந்தார்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சங்கீதா எழுதி வைத்த கடிதம்

sangeetha letter - 2025

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து கணவர் வீரப்பத்திரன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கீதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கீதாவின் தந்தை சொக்கன் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பெயரில் சங்கீதாவின் கணவர் வீரபத்திரனை கைது செய்து, சங்கீதா கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சங்கீதா எழுதி வைத்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories