அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்துக்குள் மறைக்க வேண்டும்?!

Published:

srikrishnapremiswami srivijeeyar - 2026

ஸ்ரீ ஸ்ரீ பரனூர் மஹாத்மா க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அத்திவரதர் விஷயமாகத் தம்முடைய ஒரு கருத்தைச் சொல்லுகிறார்.. அக்கருத்தினை ஆதரித்து ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமி ஒரு பேட்டி கொடுக்கிறார்.. இவ்வளவு தான் நடந்தது !

உடனே ஸ்ரீ டிசி ஸ்ரீநிவாஸன், ஸ்ரீ டிஈ ஸ்ரீநிவாஸன் போன்ற மஹாநுபாவர்கள் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள் !

தாங்கள் ‘நாராச வார்த்தை வியாபாரிகள்’ என்பதனை மீண்டும் மீண்டும் எத்தனை முறை தான் நிரூபிப்பார்களோ இவர்கள் !

இத்தனை வயதான பின்பும் இவர்கள் பக்குவமடையாதவர்களாய்; முழுமை பெறாதவர்களாய் இருப்பது வேதனையாகத் தான் இருக்கிறது.

பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமியின் கருத்தோ; ஸ்ரீ ஜீயர் ஸ்வாமியின் கருத்தோ அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற நிர்ப்பந்தமில்லை !

அவர்கள் கருத்துகளில் அடியேனுக்கும் உடன்பாடில்லை தான்.. அதற்காக அரை டிரவுசர் சிறுவர்களைப் போலே அவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கப் புறப்படமாட்டேன்..

ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் புதைக்க வேண்டாம் என்று சொல்லியதில் புதைக்க என்ற சொல் ரொம்ப கேவலமானதாம் !

ஜீயரும் அப்படியே சொல்லுகிறார் க்ருஷ்ணப்ரேமியும் அப்படியே சொல்லுகிறார்.. இவர்களுக்குப் பேசத் தெரியாதா அது இது என்று மாகனம் & பார்ட்டி ஏகத்துக்கும் குதிக்கிறார்கள்..

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

நிச்சயமாக உங்களளவிற்குத் தரம் தாழ்ந்த கொச்சையான வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் செய்யவில்லை தான்..

அவர்களுக்கு வகுப்பெடுக்கப் புறப்படுகிற திருமுக மண்டலங்கள் தங்கள் பின்புறங்களைக் கழுவாமலே காறி உமிழ வந்து விட்டன ! கலிகோலாஹலம் என்பது இது தான் !

அத்திவரதர் உயிரோட்டமிருக்கிற ஒரு சாமி ! இத்தனை வெள்ளம் மக்கள் லட்சோபலட்சமெனக் கூடி அவனை வணங்குவதே அவன் உயிருள்ளவன் என்பதற்கு சாட்சி எனவே உயிரற்றவனைப் போலே அவனைக் கருதி தண்ணீருக்குள் புதைக்காதீர்கள் என்று பொருள்படும்படியாகத் தான் ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமியும் ஜீயர் ஸ்வாமியும் பேசியுள்ளார்களே தவிர , சிலர் வகுப்பெடுத்து ; அதுவும் நாகரிகப் பேச்சென்றால் வீசம் என்ன விலை என்று கேட்கும் வீணர்களிடம் பயில வேண்டிய நிலையில் அவர்களை இறைவன் வைக்கவில்லை !

akkarakkani srinidhi - 2026
அக்காரக்கனி ஸ்ரீநிதி

பெருந்தனம் புதைக்கப்பட்டிருந்தால் அதனைப் புதையல் என்கிறோம் ! ‘தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா: … என்ற உபநிஷத்தும், ‘அந்தர் ஹிதோ நிதிரஸி த்வமஶேஷ பும்ஸாம்’ என்ற ஆழ்வானும், தேவகியின் வயிறாகிற சுரங்கத்தில் இருந்த புதையல் கண்ணன் என்ற லீலா ஶுகரும் கூட இவர்களுடைய ஏச்சுக்கு ஆளாவர்கள் போலும் !

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மாகனம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் அவர்கள் மனம் வந்து எப்படித் தான் எழுதினாரோ அறியோம்.. ஸ்ரீ ஸ்ரீ பரனூர் மஹாத்மா க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸநாதந தர்மிகளால் ‘அண்ணா ‘ என்றே வாஞ்சையுடன் அழைக்கப்படுகிறவர்..

நம் தர்மத்தை, இதிஹாஸ புராணங்களை ஶுக ப்ரஹ்மத்தைப் போலே ஸூத பௌராணிகரைப் போலே பலருக்கும் உபதேசித்து வரும் பெருந்தகை. ஆர்ஜவ குணமுடைய மஹாத்மாக்களில் ஒருவர் என்னத் தகுந்தவர் ! அவரை மாகனம் ஸ்ரீ டிசி எஸ் எப்படிச் சொல்லுகிறாரென்பதை அவர் வார்த்தைகளாகவே தருகிறேன் !

‘ கதைசொல்லி க்ருஷ்ணபிரேமியும் புதைக்க வேண்டாம் என்றே சொல்லுகிறார்.. அவரையல்ல அத்திவரதரை ..’ இப்படிப் போகிறது அவருடைய பதிவு..

90 வயதை நெருங்கும் ஒரு பெரியவர்.. நம் தர்மத்தின் தூணென நிற்பவர்.. அவரை இந்தப் பெரியார்கள் விமர்சித்திருக்கிற அழகைப் பாருங்கள் ! மஹான்கள் புதையுண்டால் நம் தர்மமும் புதையுண்டொழியும் ! யாரைப் பற்றி என்ன பேசுகிறோம் என்கிற பொறுப்புணர்ச்சி கூட இல்லாத நரர்களுக்கு வயது கூடுவதால் மட்டும் என்ன ஏற்றம் வந்து விடப்போகிறது !

தலைவர் போக்கு இப்படியென்றால்; செயலாளர் போக்கு இன்னும் மோசம் ! கேவலமான ஆடியோ பதிவுகளால் ‘சுருட்டுப் புகை’ விட்டுச் சுய இன்பம் காண்கிறார் அவர் !

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் & ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் ஆற்றிவரும் பணிகளில் நூற்றில் ஒரு பங்கு கூட நீங்கள் செய்ததுமில்லை & செய்யப்போவதுமில்லை ! நல்ல புத்தி இல்லை என்பது பெருங்குறை தான்.. அதற்காக நல்லவர்களைப் பழிக்காதீர்கள் !

ஏற்கெனவே திருக்கதவங்களை அடைத்துக் கொண்டிருக்கிறான் பேரருளாளன்.. அவன் பாகவத அபசாரத்தைப் பொறுக்ககில்லான் !

‘மத்பக்தம் ஶ்வபஶம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: பத்மகோடி ஶதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே ‘ என்றவனிறே அவன் !

கருத்து: – அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி

Related articles

Recent articles

spot_img