December 6, 2025, 10:49 AM
26.8 C
Chennai

நீ மொட்ட பாஸ்கி இல்லடா.. பொட்ட பாஸ்கி! குமுறும் ‘சோ’ ரசிகர்கள்!

Dharma Prabhu Tamil Movie3 - 2025

முத்துக்குமரன் என்பவர் இயக்கத்தில் ரங்கநாதன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் என்று தர்ம பிரபு படத்தை குறிப்பிட்டு விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள்!

சிரிப்பு நடிகர் யோகிபாபு நடிப்பில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது! ஜஸ்டின் பிரபாகர் என்பவர் இதற்கு இசை அமைத்துள்ளார்! ஸ்ரீவாரி பிலிம்ஸ் இதனை தயாரித்திருக்கிறது!

இதில் யோகிபாபு, எமதர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்! ரமேஷ் திலக் சித்திரகுப்தனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்! ராதாரவி, ஜனனி ஐயர், ஆஷிக் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்! இதில் பாஸ்கி என்பவர், நாடக மேடை சோ ராமசாமி வேடத்தில் அதே உடலமைப்பில் உடல் அசைவில் அதே காஸ்டியூமில் நடித்துள்ளார்!

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை மிகவும் இழிவு படுத்தும் வகையில்  படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக பலரும் தங்கள் கொந்தளிப்பை கருத்தாக தெரிவித்துள்ளனர்!

Dharma Prabhu Tamil Movie1 - 2025துக்ளக் ஆசிரியராக இருந்த சோ ராமசாமி மிகச்சிறந்த நாடக எழுத்தாளர் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர்! அவரது நாடகங்கள் பல தொடக்க காலத்தில் அரசியல் ரீதியாக காமெடி வசனங்கள் பொதிந்திருந்தன.  நெருக்கடிநிலை காலத்தில் கடும் எதிர்ப்பு புயலைக் கிளப்பியது அவரின் நாடக வசனங்கள்!

சோ ராமசாமி எழுதிய சில நாடகங்களில் புராண கதாபாத்திரங்கள் அதிகம் தலைதூக்கும்! நாரதர், எமதர்மன், தேவலோகம், சிவபெருமான் என்று பல கதாபாத்திரங்களை புராணகால பாத்திரங்களுடன் ஒப்பிட்டு அவர் நாடகமாக்கும் செய்திருந்தாலும், அவை எவர் மனதையும் புண்படுத்தி இருக்காத தன்மை கொண்டதாக இருந்தன!

நகைச்சுவை மட்டுமே இருக்குமே தவிர புராண கதாபாத்திரங்களை இழிவுபடுத்தும் தன்மை அவருடைய நாடகங்களில் இருந்ததில்லை! சோ எழுதிய என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நாடகம் இத்தகைய புராண கதா பாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் அருமையான நாடகம் என்று சொல்லலாம்!

Dharma Prabhu Tamil Movie6 - 2025இதில் நிகழ்கால கதாபாத்திரங்களால் தேவலோகத்தில் ஏற்படும் கடும் அமளி துமளி இவற்றை வைத்து அந்த நாடகத்தை எழுதி இருப்பார்! அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அதிசய பிறவி என்ற திரைப்படத்திலும் சித்திரகுப்தன் கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய குயுக்தி நிறைந்த வார்த்தைகளால் எமதர்மனுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பார்! இதிலும் அரசியல் ‘பஞ்ச்’ புராணப் பாத்திரங்களின் ஊடே வெளிப்படும்!

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தர்மப்பிரபு படம் முழுக்க முழுக்க இந்து மத கடவுளர்களையும் புராணங்களையும் கொச்சைப்படுத்துவதுடன் சோ ராமசாமி எனும் மாமனிதரை இழிவுபடுத்தியும் உள்ளது!

Dharma Prabhu Tamil Movie4 - 2025அதே நாடகத்துறை, அதே சினிமா துறை, அதே பத்திரிகை உலகம் என ஊடகத்தின் இன்னொரு பிரிவில் கோலோச்சிய ஒரு மாமனிதரை தாங்கள் இழிவுபடுத்துகிறோம் என்ற உள்ளுணர்வு கூட இல்லாமல் அல்லது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய எண்ணத்தில் இத்தகைய காட்சிகளை அமைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் பலரும் கண்டனங்களையும் வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர்!

குறிப்பாக பாஸ்கி என்ற இந்த நபர் நாடகத்தில் நடித்து பெயர் வாங்கியவர் தான்! அவரே தன்னுடைய குருநாதர்களில் ஒருவர் என்று சோ ராமசாமியை அண்ணாந்து பார்த்து மலைத்தவர் தான்! அவர் சோ ராமசாமி இல்லாத சூழ்நிலையில் அவர் குறித்த கேலி கிண்டல் நையாண்டி என்பதோடுகூட அவதூறு கிளப்பும் வகையில் வசனங்களை பேசி தாம் நடிக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் இவ்வளவு கீழ்த்தரமாக நடித்திருக்கிறார் என்ற கோபம் தான் பலருக்கும் எழுகிறது!

Dharma Prabhu Tamil Movie2 - 2025பலரும், “நீ மொட்டை பாஸ்கி இல்ல… பொட்ட பாஸ்கி! நீ அந்த வசனம் பேசும் போதே சோ ராமசாமி அவர்களை கிண்டல் செய்கிறோம் என்று உன் அறிவுக்கு எட்டவே இல்லையா?! அந்த அளவுக்குக் கூட நீ அறிவு கெட்டவனா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்! இப்படிப்பட்ட கூமுட்டைகளைத் தான் இத்தனை நாட்களில் தாங்கள் மேடையேற்றி நாடக நடிகனாக அழகு பார்த்தோமா?! என்று பலரும் கோபத்துடன் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

தாம் இவ்வாறு வசனம் பேசும்போதே, அது சோ சாரை இன்ஸல்ட் செய்கிறது என்ற எண்ணம் தோன்றியிருக்கும், ஆனால் ஒரு படத்தின் வாய்ப்புக்காக, இவ்வாறு கேவலமாக பாஸ்கி நடந்து கொண்டு, தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பொருமுகிறார்கள் சோ ரசிகர்கள்!

1 COMMENT

  1. கீழ்த்தரமான சிந்தனையில் ஒரு படம்.இவர்களை ஆண்டவன் தான் தண்டிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories