ராமசேது… இன்னும் 10 நாள் காத்திருங்க..! சு.சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் பதில்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

subramaniam swamy - 2026

புது தில்லி: இந்திய நிலப் பகுதியான ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கையின் மன்னார் வரையிலான மன்னார்வளைகுடா பகுதியில், ஹிந்துக்களின் கடவுளாக வணங்கப் படும் ராமர் மேற்பார்வையில் கட்டப்பட்டதாக பாரத நாட்டின் பாரம்பரிய வரலாற்றுக் காவியமான ராமாயணத்தில் கூறப்படும் ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் தனது நிலைப்பாட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

இதை அடுத்து, மத்திய அரசு உடனடியாக ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

இந்நிலையில், இன்னும் 10 நாட்கள் காத்திருக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சுப்பிரமணிய சுவாமிக்கு பதில் அளித்துள்ளது.

1 thought on “ராமசேது… இன்னும் 10 நாள் காத்திருங்க..! சு.சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் பதில்!”

  1. சுப்ரமணியசாமி சாருக்கு நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
    தமிழகத்திலுள்ள ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் என்ற அந்தஸ்தை பெறவேண்டுமென்பதே மக்களின் ஆசை, நிச்சயம் நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.