December 6, 2025, 9:57 AM
26.8 C
Chennai

சென்னை, கோவை, மதுரை, ஐ… கலக்கபோகும் மின்சார பேரூந்துகள்….!

VIJEYABASKAR - 2025தமிழகத்தில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-விஐ தரமான பேரூந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்கப்படும்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.

சென்னை: சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: 12 ஆயிரம் புதிய BS-VI தரத்திலான பேருந்துகளையும் உலகத் தரத்தில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் சுற்றுசுசுழுல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக, சென்னையில் மின்சார பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000

elaktri bus - 2025மின்சார பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் விரைவில் 1,500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் . கழிவறை மற்றும் படுக்கை வசதிகளை கொண்ட பேருந்துகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. சுற்றுச் சூழல் மாசுபடாத வண்ணம் மின்சார பேருந்துகள் வாங்குவது இருக்கட்டும். அவற்றை தங்கு தடையின்றி இயக்க சார்ஜிங் பாய்ண்டுகள் அமைத்தால் மட்டும் போதுமா? அங்கு மின்சாரம் இருக்க என்ன வழி? ஏற்கெனவே தமிழகம் தண்ணீர் பஞ்சம் மற்றும் மின் தடையை சந்திக்கிறது. புதிய மின் பேருந்துகள் பழுதடைந்தால் சரி செய்ய தொழில் நுட்பம், பொறியாளர்கள் மற்றும் மாற்று உதிரி பாகங்கள் கிடைக்க என்ன திட்டம் உள்ளது? இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து அரசு முடிவெடுக்க வேண்டும். ஏதோ அவசர மக்கள் நல்வாழ்வு திட்டம், உலக தரத்தில் வெளி நாடுகளை போல் இங்கும் மின் பேருந்து என்று வண்ண மயமாக படம் காட்டினால் மட்டும் போதாது. கடல் நீரை குடிநீராக்கவும், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் நீண்ட தொலைநோக்குடன் திட்டங்களை தமிழக அரசு உடனே தாமதிக்காது செயல் படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். பல கோடி ரூபாய்கள் செலவு பிடிக்கும். ஆனால் மாண்புமிகு மறைந்த அம்மா அவர்களால் கூட நிறைவேற்றப்படாத இதை இப்போதைய ஓபிஎஸ் – இபி எஸ் அரசு செய்யுமானால், தமிழக மக்கள் இவர்களையும் அதிமுக கட்சியையும் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். வேறு ஒருவரும் வரும் காலங்களில் ஆட்சியைப் பிடிக்கவும் வர முடியாது. செய்வீர்களா? செய்வீர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories