கன்னட இலக்கியவாதியும் நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

Published:

girish karnad - 2026

கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர் என பன்முகத் தன்மை கொண்டிருந்த இலக்கியவாதி கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 81.


* பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 81

* பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட், வீட்டில் உயிர் பிரிந்தது

* காதலன், ஹேராம், செல்லமே, ரட்சகன், மின்சாரக் கனவு உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட்.


கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை எழுதி இயக்கி வந்தவர். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.

ஒரு நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்றவர். இதன் மூலம் விருதுகள் பல பெற்றவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி, இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

girish karnat - 2026நாடக மேடை, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், திரைப்பட நடிகராகவே அவரை உலகம் வெகு எளிதில் அடையாளம் கண்டுகொண்டது. தமிழிலும் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்தர, வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.

81 வயதான கிரிஷ் கர்னாட், இலக்கியத்தின் மிக உயர்வான கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு பேரில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அவர், இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள், நடிகர்கள் திரையுலக முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”5″ tax_term=”39″ order=”desc”]

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img