December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்; உலகம் எப்படிப் பார்க்க வேண்டும்: மாரிதாஸ் கட்டுரை!

srilanka blast1 - 2025

தயவு கூர்ந்து இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு விசயத்தில் கொஞ்சம் வெளிப்படையாக உண்மையைப் பேச முற்படுங்கள்.. இந்த பூசி மொழுகும் வேலை எல்லாம் வேண்டாம்… புரிந்து கொள்ள வேண்டிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். பின் அந்த உண்மைக்குக் குரல் கொடுக்கவும் தயங்காதீர். இதில் மதம் விசயம் அல்ல மனிதம் விஷயம். இல்லை பேசுவதை நிறுத்து விடுங்கள்.

ஏன் கூறுகிறேன் என்றால், சிரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ISIS முழுமையாக வீழ்த்தியுள்ளோம் என்று சென்ற மார்ச் மாதம் அமெரிக்க கூட்டுப்படைகள் அறிவித்து இருந்த நேரத்தில் – இலங்கையில் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது குறிபிட்டதக்கது. உலகம் முழுவதும் உள்ள வகாபிசம் பரப்பும் இஸ்லாமிய அடிப்படைவாதி குழுக்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று ஒரு பொது எச்சரிக்கை இருந்தது.

இலங்கைக் குண்டு வெடிப்பிற்குக் காரணம் அங்கே உள்ள National Tawheed Jamaat என்று முதற்கட்ட விசாரணை செய்திகள் வரதொடங்கியுள்ளன. இந்த National Tawheed Jamaat நேரடியாக இங்கே உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உடன் நேரடி தொடர்பு அதிகம் கொண்ட இயக்கமாகச் செய்திகள் வரதொடங்கியுள்ளன. இந்த தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வாகாபிசம் பரப்பும் கூட்டம். இதுபோல் தென் இந்தியாவில் SDPI, PFI என்று சில கூட்டம் உண்டு. இவர்கள் முழுக்க முழுக்க கண்காணிப்பு வலையத்தில் கொண்டுவர வேண்டிய கூட்டங்கள். இல்லை இன்று இலங்கை நாளை தமிழகம் , கேரளா என்று எங்கும் நடக்கலாம். வகாபிச மிருகங்களை நாம் இஸ்லாமியர்களிடம் இருந்து பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும் , அவர்களைப் பிரித்துப் பார்க்கும் அறிவு யாரையும் விட இஸ்லாமிய குழந்தைகள் சிறுவர்களுக்கும் வேண்டும். இல்லை இது மேலும் மேலும் மோசம் ஆகும். இது போல் நிகழ்வுகள் என்றுமே தடுக்க முடியாது. இது முதல் உண்மை.

bombblast srilanka church - 2025எனக்குத் தெரிந்து 1996ல் விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்திய தீவிரவாத தாக்குல் தான் மிகப் பெரியது , அதில் 90க்கும் மேல் ஒரே நேரத்தில் பொதுமக்கள் உயிர் இழப்புகள் நடந்தன , கொடூரமாக 1500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். அதில் பலருக்கும் காது கேட்காமல் போனது , கண் பார்வை இழந்தனர். குழந்தைகள் பாதிப்பு தான் மிக அதிகம். இன்று அந்த சம்பவத்தை பின்னுக்குத் தள்ளி இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. கிறிஸ்தவர்களை நோக்கித் தாக்குதல் திட்டம் தீட்டி நடத்தியுள்ளார்கள். எந்த விதத்திலும் தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரானது அது எந்த நல்லதும் செய்யாது. அது இனம் மொழி மதம் என்று கூறி எவர் ஆயுதம் ஏந்தினாலும் அது பெரும் கேடு தான் விளைவிக்கும்.

நான் பார்த்தவரையில் இப்படியான சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அனைவரும் பேசும் வசதியான வசனம் “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. அவர்கள் மனிதக் குலத்திற்கே எதிரானவர்கள். மிருகங்கள்….” என்று கூறுகிறார்கள். ஆம் ஏற்றுக்கொள்ள வேண்டும் தான். ஏன் என்றால் இந்த தீவிரவாதில் அதிகம் ஈடுபடுவது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றாலும் அதே தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களும் இஸ்லாமிய மக்கள் தான் என்பதால் அதை ஏற்றுக்கொள்வோம்(ஒவ்வொரு மாதமும் சுமார் 264 தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள் ஆப்கானிஸ்தான் மக்கள்).

ஆனால் இங்கே இந்த விதம் வசனம் பேசும் பெரும்பாலானோர் இந்த வசனம் மூலம் தங்களை நடுநிலையாளன் என்று காட்டிக்கொள்ள முற்படுகிறார்களே தவிர ஒரு நாளும் இவர்கள் இப்படி அதிகம் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இஸ்லாமிய மத இளைஞர்கள் தான் , அந்த சிறுவர்கள் ஏன் அப்படிச் செல்கிறார்கள் , அவர்களை யார் பயன்படுத்துகிறார்கள் , எப்படி இதைத் தடுப்பது என்ற எந்த வித பேச்சும் இவர்கள் பேசவே மறுப்பர். காரணம் எவன் செத்தா என்ன நாம பேசி எதற்கு நமக்கு வம்பு என்று பக்காவாக வாழும் ஒரு கேவலமான நடுநிலை வாழ்க்கை. கொடுமை என்னவென்றால் செய்தி நிறுவனங்கள் கூட எதற்கு இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தான்.

srilanka churcharmy - 2025செய்தி நிறுவனங்கள் ஒருமுறையாது ஏன் இஸ்லாமிய இளைஞர்கள் மாணவர்கள் சிறுவர்கள் எளிதில் இந்தவித தீவிரவாத நடவடிக்கைகளில் ஈர்க்கப்படுகிறார்கள் என்று விவாதம் நடத்தி இருந்தால் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் என்ன நடக்கிறது? இஸ்லாமியச் சமூகம் அதன் குழந்தைகள் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் எவரும் நிச்சயம் இதை விவாதமாக எடுத்துப் பேச முற்படுவர் , எவர் எல்லாம் அவர்களை வாக்குவங்கியாக மட்டும் பார்ப்பவர்களாக உள்ளார்களோ அவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் நகரப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். இது அடுத்த உண்மை.

சென்ற மாதம் மட்டும் அதாவது மார்ச் மாதம் மட்டும் உலகம் முழுவதும் இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மொத்தம் 132 , இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 729 , இதில் கொடூரமான உடல் பாதிப்பை அடைந்தவர்கள் 776 , மொத்தம் 23 நாடுகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதிவரை கணக்கிட்டால் மொத்தம் 19தாக்குதல்கள் நடந்துள்ளது, இன்றைய தேதியில் இலங்கை இந்த மாததில் சேர்ந்துள்ளது. அவ்வளவு தான். அருகே இருக்கும் நாடு என்பதால் நமக்கு இன்னும் அதிகம் அதன் பாதிப்பு புரிகிறது தவிரத் தினமும் மாதம் மாதம் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது. சென்ற 2018ல் மட்டும் மொத்தமாக 54 நாடுகளில் சுமார் 1979 தாக்குதல்கள் ஜிகாதிகளல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 11775 பேர் இறந்துள்ளார்கள். இதில் குழந்தைகள் அதிகம். இறந்தால் சரி முடிந்தது கதை ஆனால் கண் தெரியாமல் போவது காது கேட்காமல் போவது என்று நிரந்தரமாக ஊனம் ஆகும் குழந்தைகள் நிலை???? நல்ல பிறந்த குழந்தையை ஊனம் ஆக்கிவிட்டு இவர்கள் இறைவனுக்கு வேலை செய்வதாக நினைத்துக் கொள்ள – நாம் வழக்கம் போல தீவிரவாதத்திற்குக் கண் இல்லை மூக்கு இல்லை அது போல் மதமும் இல்லை என்று கருத்து தெரிவிப்பதை விட வெளிப்படையாக ஏன் இஸ்லாத்தில் இந்த அளவிற்கு அதிகம் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்?

இங்கே தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக ஒரு வகாபிச வெறி ஓநாயைக் கைது செய்தால் உடனே அவனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்க சில அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் முன்வருகின்றன. இஸ்லாமியரை வேண்டும் என்றே கைது செய்வதாகக் கூறி. தீவிரவாதிகள் தாங்கள் மாட்டிக் கொள்ளும் போது தங்களை இஸ்லாமியர் என்ற போர்வையில் உடனை ஒளிந்து கொள்ளத் துடிப்பதும் அதற்கு ஆதரவாக ஒரு கூட்டம் கிளம்புவதும் இங்கே வாடிக்கையாகிவிட்டது. அது இன்னொரு மோசமான விஷயம்.இயக்குனர் அமீர் தொட்டு ஆளூர் சா நாவாஸ் வரை இந்த ரகம் தான். தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் கூட்டம் இது. என்றாவது இவர்கள் தீவிரவாதம் நடக்கும் முன் கைது செய்யபடுவதை பாராடியது உண்டா? நடந்துவிட்டால் குறை சொல்ல மட்டும் வந்துவிடுவார்கள். வழக்கம் போல மதம் இல்லை தீவிரவாதத்திற்கு என்று கதை அளப்பார்.

maithripala sirisena - 2025வளைகுடா நாடுகளிலிருந்து பெரும் செல்வந்தர்கள் அள்ளி எரியும் பணத்திற்கு இங்கே மதவெறியை வகாபிசவாதிகள் பரப்புகிறார்கள் , இன்னும் சொல்வதானால் நாட்டின் பெரும்பாலான மசூதிகளை வகாபிசவாதிகள் நம் நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் சூபிகளிடம் இருந்து கைப்பற்றும் வேலையில் இறங்கியுள்ளார்கள். அதன் வெளிப்பாடு இங்கே இருக்கும் பாரம்பரியம் அழித்து சவூதி அரபியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான் இஸ்லாமியர்களின் பாரம்பரியமாகக் கலாச்சாரமாக மாற்றும் வேலையைத் தீவிரமாகச் செய்கிறார்கள்.

“இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள் , கொலை செய்யப்படுகிறார்கள் , இந்தியாவில் பாதுகாப்பு இல்லை , RSS கொலை செய்ய திட்டம்போடுகிறது , நரேந்திர மோடி இஸ்லாமியரை அழிக்க பார்க்கிறர், அமெரிக்க இஸ்லாமியர்களை அழித்துவிட்டது , இஸ்ரேல் இஸ்லாமியர்களின் முதல் எதிரி அது இது என்று பயத்தைக் கிளப்புவதும் , ஒருவித பதட்டத்தைக் கிளப்பி அதன் மூலம் தங்கள் பக்கம் இஸ்லாமியர் இளையவர்களை வரச்செய்வது ஒரு யுக்தியாகச் செய்கிறார்கள். இதற்கு இங்கே பார்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற பொதுப் பெயரில் வேலை செய்கிறார்கள். அத்துடன் நிற்காது தூய்மையான இஸ்லாம் என்ற பெயரில் முழுக்க முழுக்க அரபியைக் கலாச்சாரத்தை அப்படியே இங்கே கொண்டுவர துடிக்கிறார்கள். இது ஒரு கீழ்த்தரமான கூட்டமாக ஆபத்தான கூட்டமாக மாறி வருகிறது. இது இங்கே மட்டும் அல்ல உலகம் முழுவதும் பரவுகிறது”.

ஆக அனைவரும் முதலில் இவர்களைக் கண்டிக்க பழகுங்கள்…. இதைப் படிக்கும் பலரையும் நான் கேட்டுக்கொள்வது தயவு கூர்ந்து நல்லவன் , நடுநிலையாளன் என்று நடிக்காதீர். முன் வந்து இந்த விதமான தீவிரவாத நடவடிக்கைகள் காரணமான ஆணி வேரை பிடுங்கி எரிய வேண்டும் என்று குரல் கொடுக்க பழகுங்கள். இஸ்லாமிய வீட்டுக் குழந்தையும் நம் குழந்தை அந்த குழந்தை தவறாகப் பயன்படுத்துவோர் கையில் சிக்கக் கூடாது – அப்படிச் சிக்கும் என்றால் நம் வீட்டுக் குழந்தை வைத்து நம் வீட்டையே நாசம் செய்யும் வேலையை இந்த வகாபிசம் பரப்பும் கும்பல் செய்யும்….

blastin srilanka churches - 2025இஸ்லாமிய நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது “தீவிரவாதம் எதிர்த்து நிற்க முன்வாருங்கள். உங்களின் பின்னால் ஒளிந்துள்ள, ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் அந்த கூட்டத்தை விரட்டி அடியுங்கள். அமைதிக்கும் நீதிக்கும் உலகமே போராடி வரும் இந்த நேரத்தில் அதற்காகவே வாழுங்கள். அது தான் இந்தியச் சூபிகள் ஞானிகள் காட்டும் பாதை அதுவே சரியாக இஸ்லாமிய மக்களை வழி நடத்தும் தவிர இந்த மதவெறி பிடித்த சவூதி அரபியைக் கலாச்சாரத்தைத் தூக்கிச் சுமக்கும் வகாபிச வாதிகளால் ஒரு நன்மையையும் இஸ்லாமியச் சமூகத்திற்குக் கிடைக்கப் போவதில்லை. மாறாகக் கெட்ட பெயரை வேண்டுமானாலும் சம்பாரித்து கொடுப்பர்.

இலங்கையில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல – இது மனிதக் குலத்தின் மீதே நடந்துள்ள தாக்குதல். இது மனிதாபிமான கொண்ட எவரும் ஏற்க முடியாது, கண்டிக்கிறோம் என்பதைத் தாண்டி நடத்திய அந்த நோக்கம் அந்த ஆணிவேர் முழுமையாகக் கருக்க வேண்டும். அதை அழித்து ஒழிக்க வேண்டும்.

இறுதியாக :

மாணவர்கள் புரிந்து கொள்ளுங்கள்,

ஆயுதம் ஏந்திய எந்த கூட்டத்தாலும் எந்த நல்லதும் 20ஆம் நூற்றாண்டில் நடக்கவில்லை நடக்கப் போவதும் இல்லை எனவே எவன் மொழி இனம் மதம் என்று ஆயுதம் எந்த அலைக்கிறானோ அவர்கள் அனைவருமே அழித்து ஒழிக்கப்பட்ட வேண்டும்.எனவே இந்த விவகாரத்தில் இந்த பூசி மொழுகும் வேலை எல்லாம் வேண்டாம்… புரிந்து கொள்ள வேண்டிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். பின் அந்த உண்மைக்குக் குரல் கொடுக்கவும் தயங்காதீர். இதில் மதம் விசயம் அல்ல மனிதம் விஷயம்.

{அப்புறம் இன்னொரு விஷயம் இரண்டு நாட்கள் முன்னர் இந்துக்களின் பண்டிகையில் கூட்ட நெரிசலில் 7 பேர் இறந்து போக அதைக் கேலி செய்தனர் திமுக திக கூட்டத்தினர். என்ன கடவுள் காப்பாற்ற வரவில்லையா என்று – அதே கூட்டம் இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் தாக்குதல் என்றதும் அனுதாப வசனங்கள் பேசுகிறார்கள். இந்துக்கள் என்றால் கேலி கிறிஸ்தவர்கள் என்றால் அனுதாபம் இந்த விதம் இரட்டை நாக்கு கொண்ட திமுக திக ஆதரவாளர்கள் இன்னொருவிதமான தீவிரவாதிகள். இவர்களையும் சமூகத்தில் அழித்து ஒழிக்க வேண்டும்.

srilanka dead - 2025அடுத்து எப்படி இவ்வளவு வெடிமருந்துகள் வந்தன???? அரசு எப்படி இதை அனுமதிக்கும்???? ஒருவேளை அரசே வைத்துவிட்டு இஸ்லாமியர் மீது பழி போட முயல்கிறார்கள் என்று ஒரு கூட்டம் ஆரம்பிக்கும். இன்னும் ISIS இஸ்ரேலியர்கள் உருவாக்கின கூட்டம் என்று முதலில் ஆதரவு தெரிவித்துவிட்டு பின் உலகம் முழுவதும் ISISக்கு எதிர்ப்பு வந்ததும் அப்படியே அதை இஸ்ரேலியர்கள் என்று மாற்றினர்… அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் கொண்டாடிய ஒரு மதவெறி கூட்டம் பின்னாலும் அந்த இரட்டை கோபுரம் குண்டு வைத்ததே அமெரிக்க தான் என்று பரப்பினர். எனவே இனி இதற்கும் ஒரு கூட்டம் கதை எழுதக் கிளம்பும் அவர்கள் இன்னொரு கீழ்த்தரமான பொய்யர்கள்.

இந்த விதம் நாடுமுழுவதும் மதவெறி பிடித்த கூடடத்தை ஒரு நாளும் எதிர்த்து கேள்வி எழுப்பாத இயக்குனர் அமீர், ஆளூர் சா நவாஸ் ஆரமித்து மனுசாபுத்திரன் என்ற அப்துல் ஹமீது வரை உள்ள மதவெறியன் எவரும் எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்கள் அது தான் அவர்கள். இவர்களையும் சமூகம் நம்பாது புறக்கணிக்க வேண்டும். இவர்கள் மதவெறி இல்லாதது போல் நடிக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் மிக பெரிய ஆபத்தான கூட்டம்.}

எந்த பாவமும் செய்யாத பிஞ்சு குழந்தைகள் உடல்கள் சிதறிக் கிடக்கிறது – அதன் மீது சத்தியம் கொண்டு சிந்தியுங்கள்…

-மாரிதாஸ்

1 COMMENT

  1. எல்லோருக்கும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் தயவு செய்து படியுங்கள் , இந்த மாரிதாஸ் மலைச்சாமி என்று சொல்கின்றவன் மொபைல் நம்பர் 9092922112. இவன் இப்பொழுது மதுரையில் இல் இருக்கின்றான், இவனுடைய சொந்த ஊர் மதுரை பக்கத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊர். இவன் SACS இன்ஜினியரிங் காலேஜ் ல computer சயின்ஸ் படிச்சவன் , SBM காலேஜ் , திண்டுக்கல், மற்றும் வேலம்மாள் காலேஜ் இல் வேலை பார்த்தவன். இவனுடைய பல பெயர்கள் அப்துல் ரஹ்மான், ஜோயல் அந்தோனி, அகிலன் மலைச்சாமி என்று பெயர்கள் வைத்து கொண்டு ஜாதி கலவரம் மற்றும் மத வெறுப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்குவது. மேலும் இவன் SBM காலேஜ் இல் வேலை செய்யும் பொழுது பல #மாணவிகளிடத்தில் தவறாக நடக்க முற்பட்ட பொழுது கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடையே பிடிபட்டு ஒரு நாள் முழுவதும் அனைவரிடமும் அடி வங்கி கல்லூரியை விட்டு அனுப்பி விட்டார்கள். மேலும் வீட்டிற்கு சென்ற பிறகு இவனுடைய அண்ணன் மகேஷ் குமார் என்பவனின் மனைவியை அதாவது தன்னுடைய அண்ணியை கெடுத்து உள்ளன். மேலும் இவனுடைய அண்ணனும் ஒரு கூட்டி குடுக்கும் பேர்வழி ஆகி விட்டான் , தற்பொழுது தன் மனைவியை தன் தம்பிக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் பார்கிறான். மேலும் இது எல்லாமமே அவனுடைய அண்ணியின் விருப்பம் இல்லாமல் நடப்பதாக அந்த pennudaiya விருப்பம் இல்லாமல் இப்படி கொடுமை படுத்துவதாக தன் கணவன் மற்றும் கொழுந்தனின் கொடுமைகளை தன் அவமானம் தாங்க முடியாமல் தன் மாமனார் மலைச்சாமி இடம் சொல்லவே அந்த மலைச்சாமி கடந்த 2015-ல் ஜூன் மாதம் அவமானம் தாங்க முடியாமல் இறந்து விட்டார்.

    திண்டுக்கல்-லில் ஒரு மாணவியின் அண்ணி ( பள்ளி ஆசிரியை ) பிரியாணி கடை ஓனர் மனைவியை தன் சல்லாபங்களுக்கு பயன்படுத்தி கெடுத்தவன் ஆசைவார்த்தை கூறி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories