சுவையான மேதாம்பா!

சமையல் புதிது
dish

தேவையான பொருட்கள்:
மாங்காய் – 2
உப்பு, மிளகாய் பொடி – தேவைக்கேற்ப
துருவிய வெல்லம்- 3/4 கப்
வறுத்த வெந்தயப்பொடி – 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

மாங்காயை நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாகவோ அல்லது சீவியோ எடுத்துக் கொள்ளலாம்.

கடாயில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு நறுக்கிய அல்லது துருவிய மாங்காய்களை போட்டு மிதமான தீயில் வதக்கவும். மாங்காய் நன்றாக வெந்தவுடன், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தை போட்டு கொஞ்சம் தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். வெல்லத்தின் பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த மாங்காயை இதனுடன் சேர்க்க வேண்டும். உப்பும் சேர்க்கவும். நன்றாக சுருளக் கிளறவும்.

வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயப்பொடியை தூவி, இந்தக் கலவையை மாங்காய், வெல்லக் கலவையுடன் சேர்க்கவும்.

சுவையான மேத்தாம்பா ரெடி. பத்து நாட்களுக்கு மேல் உபயோகப்படுத்தலாம்.

சப்பாத்தி, பூரி, மோர் சாதம் போன்றவற்றுக்கு ஏற்ற அருமையான டிஷ்.

  • ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.