இது சாப்பிட ஆரம்பிச்சா விரலைக் கட்டுப்படுத்தவே முடியாது! யாம் ஃபிங்கர் சிப்ஸ்!

Published:

Yam Finger Chips
Yam Finger Chips

யாம் ஃபிங்கர் சிப்ஸ்

தேவையானவை:
சேனைக் கிழங்கு (கருணைக்கிழங்கு) – கால் கிலோ,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேனைக்கிழங்கின் மேல் தோலை சீவிவிட்டு, நன்கு கழுவி, விரல் நீள துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், சேனைக்கிழங்கு துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதி அளவு (அரை வேக்காடாக) வெந்த பிறகு இறக்கி வடிகட்டவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சேனைத் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img