
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை:
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப்,
பாதாம் பருப்பு – 10, ஃப்ரெஷ்
க்ரீம் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: பாதாம் பருப்பை ஊறவைத்து, ஸ்வீட் கார்னுடன் சேர்த்து அரைக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும். இறக்கியதும் ப்ரெஷ் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும்.