லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நட்டி ஃப்ரூட்டி புலாவ்!

Nutty Fruity Pulao - 2026

நட்டி ஃப்ரூட்டி புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
காரட், பட்டாணி, பீன்ஸ் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை – ஒரு கப் (துண்டுகளாக நறுக்கியது)
முந்திரி, பாதாம், திராட்சை – ஒவ்வொன்றும் 15
ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை – தாளிக்க
பால் – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
பனீர் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 3 தேக்கரண்டி
நெய் – கால் கப்

செய்முறை
அரிசியை நன்கு களைந்து தண்ணீரை வடித்து பத்து நிமிடங்கள் வைக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் 2 நிமிடம் வாசனை வர வதக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பீன்ஸ், காரட் மற்றும் பட்டாணியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

அதிலேயே வதக்கிய அரிசி சேர்த்து ஒரு கப் பாலும், ஒரு கப் நீரும் சேர்த்து குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அணைத்து விடவும்.

குக்கரைத் திறந்து சாதத்தை உதிர்க்கவும். தேவையான உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.

இரண்டு தேக்கரண்டி நெய்யில் ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, கரம்மசாலா, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதக்கவும்.

பனீரை சிறு சதுர துண்டுகளாக்கி, எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். அதை எடுத்துவிட்டு அதே வாணலியில் மேலும் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து எடுத்து வைக்கவும். மேலும் நெய் சேர்த்து நறுக்கிய பழத்துண்டுகளை ஐந்து நிமிடம் வதக்கவும்.

வறுத்த பனீர், முந்திரி, பாதாம், திராட்சை, வதக்கிய வெங்காயம், பழத்துண்டுகளை புலாவில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்க்கவும்.

அடுப்பில் வைத்து நன்கு கிளறி மூடி (வெயிட் போடக் கூடாது) பத்து நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். சூடான, சுவையான நட்டி ஃப்ரூட்டி புலாவ் தயார்.

இத்துடன் உருளைக் கிழங்கு குருமா நல்ல மேட்ச். பொரித்த அப்பளம், குருமாவுடன் பரிமாறுங்கள்.

இதில் அன்னாசி, கருப்பு (அ) பச்சை திராட்சை இருந்தால் சேர்க்கலாம். வாழைப்பழம், கொய்யாப்பழம் சேர்க்கக்கூடாது.

அதிக காரம் இல்லாததால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நெய் அதிகம் சேர்க்க விரும்பாதோர், அளவைக் குறைத்துக் கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories