Screenshot 2022 0227 134615 - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சாமை கூட்டாஞ்சோறு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Screenshot 2022 0227 134615 - 2026

சாமை கூட்டாஞ்சோறு
தேவையான பொருட்கள்

2 கப் சாமை அரிசி
1/4 கப் துவரம் பருப்பு
1/4 கப் கத்தரிக்காய்
1 முருங்கைக்காய்
1 மாங்காய் ((சிறியது))
2 தக்காளி
6 சின்ன வெங்காயம்
3 பச்சைமிளகாய்
சிறிது கறிவேப்பிலை
1 ஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு நெல்லிக்காய் அளவு புளி
3 ஸ்பூன் நல்லெண்ணெய்
1 சிட்டிகை பெருங்காயம்
2 சில் தேங்காய்
1 ஸ்பூன் சீரகம்
4 பல் பூண்டு
சிறிது கடுகு
சிறிது உளுந்து

செய்முறை

சாமை அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் துவரம் பருப்பை வேகவிடவும். துவரம் பருப்பு அரைப்பதம் வெந்தபின் சாமை அரிசி, காய்கறிகள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு ஒரு மண்பானையில் வேக விடவும்.

இந்த கலவை முக்கால் பதம் வெந்தவுடன் புளியைக் கரைத்து விடவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை, தேங்காய் சில், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்த்து in சிறுதீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து சேர்க்கவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சாமை கூட்டாஞ்சோறு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.