vandakai patchati - 2026

எப்படி பாருங்க.. டேஸ்ட் அப்படி.. வெண்டைக்காய்ப் பச்சடி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
vandakai patchati - 2026

வெண்டைக்காய்ப் பச்சடி

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ (சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) துவரம்பருப்பு (மலர வேகவைத்தது) – அரை கப்
தக்காளி – மூன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:
கடாயில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடியைச் சேர்த்து லேசாகக் கிளறி, புளித்தண்ணீரை ஊற்றிக் கலக்கவும். வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போய், காய்கள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.