kavini keer - 2026

ஆரோக்கிய சமையல்: கவுனி அரிசி கீர்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kavini keer - 2026

கவுனி அரிசி கீர்

தேவையான பொருட்கள்:
கவுனி அரிசி – கால் கப்
காய்ச்சாத பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – முக்கால் கப்
கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கவுனி அரிசியைக் கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே தண்ணீருடன் குக்கரில் வைத்து மூடி, ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து, பிறகு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டராகும் வரை காய்ச்சவும். இதனுடன் அரைத்த கவுனி சாதம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.