கலக்கலா செய்யுங்க‌.. காலிஃப்ளவர் சூப்!

Published:

masroom - 2026

காலிஃப்ளவர் சூப்

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு வேகவைத்த நீர் – 2 கப் நறுக்கிய காலிஃப்ளவர் – ஒரு கப் வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்) பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – ஒன்று
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை டம்ளர் நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நறுக்கிய காலிஃப்ளவரை உப்பு கலந்த சூடான நீரில் போட்டுக் கழுவி எடுக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு நீர், நறுக்கிய காலிஃப்ளவர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கிப் பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img