health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சொட்டை, கல்லீரல் வீக்கம், எலிக்கடி, இரத்த க்கட்டு, முடி உதிராமல் இருக்க..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தலையில் சொட்டை ஏற்பட்டு விட்டதா?

பூசணியின் கொழுந்து இலைகளை கசக்கி சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்து வர சொட்டை மறைந்து முடி வளரத் தொடங்கும்.

கல்லீரல் வீக்கத்திற்கு…

நொச்சி இலை சாறுடன் பசு கோமியத்தைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குணமாகும்.

எலிக்கடிக்கு…

குப்பைமேனி இலையைக் கசக்கி கடிவாயில் வைத்து இரும்புக் கரண்டிக் காம்பை நெருப்பில் வைத்துக் காய்ச்சி அந்த இலையின் மீது வைத்துச் சுட வேண்டும். கடிவாயில் சூடு தாக்கியதும் எடுத்துவிட வேண்டும். இதனால் எலி விஷம் நீங்கும்.

இரத்தக் கட்டுக்கு…

மஞ்சளை சந்தனம் போல் மைய அரைத்து இரத்தம் கட்டிக் கொண்ட காயத்தின் மேல் பற்றுப் போட்டு வர இரத்தக் கட்டு கரைந்து வலியும் குணமாகும்.

கூந்தல் உதிராமலிருக்க…

ஊமத்தங்காயை இடித்து சாறு பிழிந்து அரை லிட்டர் எண்ணெயில் ஊற்றி நீர் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.