ஆவடியில் விஷவாயு தாக்கி தந்தை மகன் உட்பட மூவர் பலி..

சென்னை ஆவடியில் இன்று வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை மகன் உட்பட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். தொழில் அதிபரான இவர் சிவசக்தி நகர் 52-வது தெருவில் பெரிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி பெயர் ரதி. மகன் பிரதீப்குமார். இவர்களை தவிர பிரேம்குமாருக்கு 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

இன்னொரு மகள் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமார் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.பிரேம்குமார் வீட்டு காம்பவுண்டுக்குள் மரங்களும் உள்ளன. அங்குள்ள காலி இடத்தில் தண்ணீர் தொட்டி ஒன்றையும் வீடு கட்டும்போது அவர் அமைத்திருந்தார். இந்த தண்ணீர் தொட்டியை
சுத்தம் செய்த பிறகு தண்ணீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடரை போட்டு பிரேம்குமார் மூடி வைத்ததாக கூறப்படுகிறது.

இன்று தண்ணீர் தொட்டியில் மீண்டும் இறங்கிய பிரேம்குமார், பிளீச்சிங் பவுடரை தண்ணீர் ஊற்றி வெளியேற்ற நினைத்திருந்தார். தண்ணீர் தொட்டியில் இறங்கிய அவர் சிறிது நேரத்திலேயே வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மகன் பிரதீப்குமார் தண்ணீர் தொட்டியில் இறங்கினார். அவரையும் வி‌ஷ வாயு தாக்கியது. இதில் அவரும் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.இதையடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவரை உதவிக்கு அழைத்தனர். அவர் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் சிக்கி இருந்த தந்தை-மகன் இருவரையும் மீட்பதற்காக உள்ளே இறங்கினார்.ஆனால் அவரும் வெளியில் வரவில்லை. வி‌ஷ வாயு தாக்கியதில் பிரமோத்குமாரும் தொட்டிக்குள்ளேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரான சாரநாத் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரையும் வி‌ஷவாயு தாக்கியது. இதில் மூச்சடைத்து அவரும் மயங்கினார்.

இப்படி அடுத்தடுத்து தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் வெளியில் வராமல்உள்ளேயே மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி 4 பேரையும் மேலே தூக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 4 பேரின் உடலையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் தொழில் அதிபர் பிரேம்குமார், அவரது மகனான கல்லூரி மாணவர் பிரதீப்குமார், பக்கத்து வீட்டுக்காரர் பிரமோத்குமார் ஆகிய 3 பேரும் வி‌ஷ வாயு தாக்கியதில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வி‌ஷ வாயு தாக்கியதில் மயங்கிய சாரநாத் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

202204151401050320 Tamil News Tamil News poisonous gas attack three death near SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories