ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.
அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும் மத்திய அரசையும் சாரும்.பாராட்டுக்குரியது.
அதன் பின் ஆளுனர் திரு வித்யாசாகர் ராவ் சசி முதலமைச்சர் பதவி கோரிய போது, பெரும்பான்மை இருந்தும் காலம் தாழ்த்தியது ஒரு புறம் விமர்சனத்துக்குரியது என்றாலும் மறு புறம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அவரின் நிலையை நிலை நிறுத்தியது.
அதன் பின் எடப்பாடி அரசுக்கு மிகவும் காலம் தாழ்த்து அழைப்பு விடுத்தது ஏன் என்று புரியவில்லை.
பல எம் எல் ஏக்கள், எடப்பாடிக்கு ஆதரவு இல்லை என்ற நிலை எடுத்ததும், suo..moto வாக தானாக முன் வந்து சட்டசபையில் எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்திருக்க வேண்டும். இப்போது , இவர் வேலையை நீதிமன்றம் தலையிட்டு நிர்ணயிப்பது களங்கமே.
மும்பைக்கும், தமிழகத்துக்கும் பறந்து கொண்டிருந்த ராவ் சென்னை வந்தாலே செய்தியாக இருந்தது.
அக்டோபர் நாலாம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மை நிர்ணயம் செய்யக் கூடாது, இந்த 18 எம்எல்ஏக்கள் நீக்கிய வழக்கு விசாரிக்கப்படுகிறது. இன்னேரத்தில், ஒரு முழு நேர ஆளுனர் வருவது வரவேற்கத்தக்கது.
இவர் இனி புரியாக் கால விளம்பங்கள் செய்யாமல் இருப்பார் என நம்புவோம்.
திரு பன்வாரிலால் புரோஹித் தமிழ் மாநில முழு நேர ஆளுநர்
Better Late Than Never
– பட்டுக்கோட்டை பலராமன்



