தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

Published:

directorateof govt - 2026

தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான முதல் கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வில் பங்கேற்கலாம்!

இதற்கான விண்ணப்பங்களை https://www.dgt.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயை இணைத்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்!

விண்ணப்பங்களை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; கால அவகாசம் அதற்கு மேல் நீடிக்கப் படாது என்று  கூறப்பட்டுள்ளது!

Related articles

Recent articles

spot_img