
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப் படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கமும் , உற்சாகமும் தந்து மாணவர்களை தலைசிறந்தவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் தன்னலமற்ற ஆசிரியர்களுக்கு ABVP சார்பில் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதிற்காக மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். இவர்களை ஏபிவிபி மாணவத் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து இவ்விருதினை வழங்க உள்ளனர்.
இதற்காக மாநகர செயலாளர் ஹரிவிஷ்ணு, மாவட்ட இணை ஒருகினைப்பாளர் விக்னேஷ் , மற்றும் Ms பல்கலைக்கழக செயலாளர் வெங்கடேஷ் , சட்டக்கல்லூரி பொறுப்பாளர் வள்ளி கனேஷ் , பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிசந்திரன் ஆகியோர் தலைமையில் விருது வழங்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.



