
பெண் தொண்டர் சுடிதார் துப்பட்டாவை பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்று தனது உதவியாளரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
https://dhinasari.com/latest-news/69706-congress-former-cm-sidhdharamaiya-in-a-controversy.html
காங்கிரஸின் மூத்த தலைவரும், கர்நாட முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன் கோபத்திற்கு பெயர் பெற்றவர். இதனால் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மைசூரில் தனது உதவியாளர் கன்னத்தில் இன்று ஓங்கி அடித்துள்ளார் சித்தராமையா. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு அங்கே இருந்து அவர் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் பார்வையிடுவதற்காக திரும்பினார். சற்று தூரம் நடந்து சென்றபோது திடீரென அவரது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று அறை விட்டார்.

இது செய்தியாளர்களின், வீடியோ கேமராக்களில் லைவாக பதிவானது. இச்சம்பவத்தால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த உதவியாளரை தொடர்பு கொண்டு நிருபர்கள் விவரம் கேட்டனர்.
அந்த உதவியாளர் கூறுகையில், அதிகாரி ஒருவர் சித்தராமையாவிடம், பேசவேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். தொலைபேசியை அவரது காது அருகே நான் கொண்டு சென்றேன். அவர் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்ததால், நான் இவ்வாறு செய்ததை விரும்பவில்லை. எனவே அடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டது.
#WATCH: Congress leader and Karnataka's former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019