
“பாருங்க சங்கிகளே… வங்காளதேசத்தின் ஜிடிபி விகிதம் 8.31%, நேபாளம் 7.9%.. இந்தியா வெறும் 5%” என என்.ஜி.ஓ பூவுலகின் நண்பர் உட்பட பலரும் பகிர்கிறார்கள் ஒரு மீம்ஸை. அதில், ஊழல் மன்னன் மன்னுமோகனுக்கு கொடியும் பிடிக்கிறார்கள்.
ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. என்றாலும், அதை சரியாக ஒப்பிட வேண்டும்.
வங்காளதேசத்தின் ஜிடிபி (2017) – $ 24,972 – $. 2,075
நேபாளத்தின் ஜிடிபி (2017) – $ 2,447 – $. 193
பூட்டானின் ஜிடிபி (2017) – $ 251 – $ 18
பாகிஸ்தானின் ஜிடிபி (2017) – $ 30,495. – $ 1,646
பாரதத்தின் ஜிடிபி (2017) – $. 2,60,000 – $ 13,000
எனவே, விகிதத்தை வைத்து ஒப்பிடுவது அறிவீலிகள் செயல். மேலும் எடுத்துக் காட்டுக்கு,
அமெரிக்க ஜிடிபி விகிதம் 2.3%, ஆனால் ஜிடிபி தொகை 19.39 lakh crores USD
கனடா. ஜிடிபி விகிதம் 3.0%, ஆனால் ஜிடிபி தொகை 1.65 lakh crores USD
அமெரிக்க ஜிடிபி விகிதம் 1.8%, ஆனால் ஜிடிபி தொகை 2.62 lakh crores USD
குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள் உலக வங்கி தந்திருப்பவை. 2017 தகவல்கள்.
எனவே, விகிதத்திற்கும் – தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டு, நம்மை முட்டாளாக்கும் வாட்சாப் புரளிகளை அப்படியே நம்புவதை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவை தவிர மற்ற உலக நாடுகளெல்லாம் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை சமீபத்தில் வந்தது. (Global economy may face recession in 9 months, but not India: Morgan Stanley – https://tinyurl.com/y5wfashq)
ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, ஃபிரான்சு, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார மந்த நிலையில் உள்ளன இப்போது.
இந்தியா எதிர்பார்த்த 7% வளர்ச்சி விகிதம் இப்போது 5% என்பது பின்னடைவு என்றாலும், இது Positive Growth.
இந்தியாவில் மந்த நிலை என்பது தெளிவாக இல்லை. மாருதி, ஹோண்டா போன்ற பழைய நிறுவனங்கள் மந்த நிலை இருப்பதாக கூறினாலும், புதிய கார் கம்பெனிகள் மந்த நிலையில் இருப்பதாக கூறவில்லை (What slowdown? New auto entrants are cruising – https://tinyurl.com/y3n82vp9)
ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பொங்கல். ஒரு காலத்தில் சகிப்பின்மை பொங்கல் வைத்தார்கள். இப்போது பொருளாதார பொங்கல் வைக்கிறார்கள்…. இதுவும் கடந்து போகும்.
4:17 PM · Sep 3, 2019 – History will be kind to me- Manmohan Singh
https://twitter.com/SundarrajanG/status/1168838032008470528
- செல்வநாயகம்



