
- நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!
- ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு!
- ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!
- காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு!
கொரோனா வைரஸ் ப்ரவல் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அமைப்பின் சார்பில் நடத்தப் படும் மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். அதன்படி சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப் பட்டிருக்கிறது.

