கல்லூரி பேராசிரியர்களை தாக்கி விரட்டும் தாளாளரின் தந்தை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
college-1-1
college-1-1

மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியர்களை ஓட ஓட விரட்டி அடித்த கல்லூரி சேர்மேனின் தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் விஸ்வபாரதி என்கிற பெயரில் பள்ளி, கல்லூரி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கல்லூரிகளுக்கு தாளாளராக இருந்தவர் சாட்ஷாதிபதி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

sripathi-raja
sripathi-raja

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சொத்துகளை இரண்டு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.

இதில் பெரிய மகன் ஸ்ரீபதிராஜாவுக்கு மெட்ரிக் பள்ளியும், பெட்ரோல் பங்க்கும், அதே போல் அவரது இரண்டாவது மகனான ஸ்ரீதருக்கு கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியும் பிரித்து கொடுத்துள்ளார்.

sridhar
sridhar

இந்நிலையில் இரண்டாவது மகனுக்கு வழங்கிய கல்லூரியை தந்தை சாட்ஷாதிபதி மற்றும் மூத்தமகன் ஸ்ரீபதிராஜாவும் அபகரிக்க நினைத்து, தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மிரட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியாட்களுடன் தந்தை மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் கல்லூரிக்குள் புகுந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் மற்றும் அலுவலக கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இது குறித்து தந்தை மற்றும் சகோதரர் மீது மொரப்பூர் காவல்நிலையத்தில் இளைய மகன் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.

college-2
college-2

இந்நிலையில் நேற்று ஸ்ரீதரின் தந்தை மற்றும் மூத்த சகோதரர் 20 க்கும் மேற்பட்ட அடியாட்களோடு கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து ஸ்ரீதரை தாக்கி வகுப்பறைக்குள் பூட்டி விட்டு அங்கு பணிபுரியும் பெண் பேராசிரியை மற்றும் ஆண் பேராசிரியர்களை வெளியே இழுத்து வந்து சரமாரி தாக்கி விரட்டினர்.

இதில் காயமடைந்த கல்லூரி பேராசிரியை மற்றும் இளைய மகன் ஸ்ரீதர் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீதர் கூறும் போது சொத்திற்க்காக தனது தந்தையும் சகோதரரும் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் இன்று கல்லூரிக்குள் புகுந்து என்னையும் கல்லூரி பேராசிரியர்களையும் தாக்கி உள்ளனர்.

shatyathi-pathi
shatyathi-pathi

தொடர்ந்து மிரட்டல் விடும் தந்தை மற்றும் சகோதரர் மீது மொரப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்துறையினர் தனது தந்தைக்கும்,சகோதரர்க்கும் சாதகமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய அவர் கொலை மிரட்டல் விடுக்கும் தனது தந்தை மற்றும் சகோதரர் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

சொத்திற்க்காக தந்தையும்,மூத்த மகனும் சேர்ந்து இளைய மகனை அடித்தும், கல்லூரியில் பணியாற்றும் பேராசியர்களை கல்லூரி சேர்மேனின் தந்தை விரட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.