
தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கையிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்க்கு இதுவரை 2, லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7,ஆயிரத்து 299.மாணவர் சேர்க்கையிடங்களில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. தற்போது 27 ஆயிரத்து 215 மாணவர் சேர்க்கையிடங்கள் காலியாக உள்ளன
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவில் மாணவர்கள் முன் வருவதால் மாணவர் சேர்க்கை தேதியை 30 ம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையிடங்களை 20 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் என மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.
இட ஒதுக்கீடுகளுக்கு அடிப்படையிலேயே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.மாநில கல்விக் கொள்கையே கடைபிடிக்கப்படும் . தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக குழு அமைத்துள்ளார்.