சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பொது அறிவுப் பிரிவில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?” என்ற கேள்விக்கு விடையான 4 பதில்களில் ஈ.வே.ரா.,வின் பெயர் மட்டும் சாதிப் பெயருடனும் அச்சிடப்பட்டிருந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!




