கல்விக் கொள்கை: எதிர்ப்புகளால் முடக்கி விடாதீர்கள்! திருத்தங்களால் செழுமைப் படுத்துங்கள்!!

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை! பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல! அவை ஆய்வுகளை மேற்கொள்வதற் கானவை! 

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை! பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல! அவை ஆய்வுகளை மேற்கொள்வதற் கானவை!

இது தான் தேசிய கல்விக் கொள்கையின் மையப் புள்ளி அல்லது அடிநாதம்! ஆய்வுக் களங்களாக மாற்றம் அடையும் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களின் கல்விப் பயணத்தை கட்டமைக்கும் வகையில்

1- கல்வியை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைப்பது.
2- சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மாணவனை உருவாக்க கற்பித்தல்.
3- மாணவனின் சிந்தனை ஆற்றல் எந்த துறை சார்ந்தது என்று கண்டறிதல்.
4- மாணவனின் துறை சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்தி சான்றளிப்பது.
5- துறை சார்ந்த – மேம்பட்ட அறிவாற்றலைக் கொண்டு புத்தம்புதிய ஆய்வுகளை மேற்கொள்ள அவனுக்கு வாய்ப்பளிப்பது.

இந்த வகை படிநிலைகளை கொண்டிருக்கிறது தேசிய கல்விக் கொள்கை! இந்த புதிய இலக்கு எவற்றை எல்லாம் நிராகரிக்கிறது?
1- மெக்காலே கல்வி முறை.
2- இந்திய நெறிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிரான அல்லது அவற்றில் இருந்து மாணவர்களை விலக்கி வைக்கும் சிந்தனைகள்.

📌 ஒரு கொள்கையின் அம்சங்களில் குறை கண்டு விமர்சனம் செய்வது அல்லது மாற்று யோசனைகளை முன் வைப்பது வேறு — ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது வேறு.

ஒட்டுமொத்த நிராகரிப்பு பார்வைத் திறனற்றவர்கள் யானையின் உருவத்தை  விவரித்தது போலவோ — மக்களை அப்படி பார்க்கத் தூண்டும் நோக்கம் கொண்டதாகவோ இருந்து விடக்கூடாது!

📌 தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் சில அம்சங்களில் எனக்கும் கூட மாறுபட்ட கருத்து இருக்கிறது. உதாரணத்திற்கு , பட்டங்களை வழங்கும் பொறுப்பு
இப்போது பல்கலைக்கழகங்களிடம் இருக்கிறது. கல்லூரிகளே பட்டங்களை வழங்க
அனுமதித்து விடலாம் என்கிறது வரைவுக் கொள்கை.

பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளுக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் , நமது தனியார் கல்லூரிகள் கல்வி ஆர்வலர்களால் நடத்தப்படவில்லை. வியாபாரிகளால் நடத்தப்படுகிறது. தங்களது கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட
தகுதியற்ற மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கிவிட வாய்ப்பு இருக்கிறது.

பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் உதாரணங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. அதனால் இந்த அம்சத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அதற்காக வரைவுக் கொள்கையை நான் நிராகரிக்க மாட்டேன்.
ஒட்டுமொத்தமாக எதிர்க்க மாட்டேன். பல்கலைக்கழகங்களின் பணிச்சுமை
அதன் ஆய்வு கள நோக்கத்தை சீர்குலைத்து விடக்கூடாது என்ற வரைவு அறிக்கையின் அக்கறையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

தேர்வாணையம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி பட்டங்களை வழங்கும் பொறுப்பை அதனிடம் விடுவது நல்லது என்று எனது கருத்தை பதிவு செய்வேன்.

இந்த விஷயத்தில் என்னைப் போலவே மாற்றுக் கருத்து கொண்டவர்கள் நாட்டில் இருக்கலாம். என்னைவிட சிறந்த மாற்று யோசனைகளை அவர்கள் தெரிவித்து இருக்கலாம். அவற்றில் ஒன்று ஏற்கப்பட்டாலும் மகிழ்ச்சி அடைவேன்!

எதிர்ப்புகளால் இந்த கல்விக் கொள்கையை முடக்கி விட முடியாது. திருத்தங்களால் செழுமை படுத்த முடியும்.

– வசந்தன் பெருமாள்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...