
திண்டுக்கல் நகரில் நடந்த ரோல் பால் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் உள்ள ராஜன் உள் விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவில் இரண்டாவது ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது இதில் இதில் சீனியர்கள் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடந்தது இந்த போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடமும் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு இரண்டாமிடமும் வெற்றி பெற்றது
தமிழ்நாடு ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் வைத்திஷ் குமார் கலந்து கொண்டு விளையாடி சாதனை படைத்தார் இவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி இரண்டாமிடம் பெற்று தந்தவர் மேலும் உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அவரை ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லூரி ஆலோசகரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா பாராட்டினார்