
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 1544 எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Executive (on Contract basis)
காலியிடங்கள்: 1044
வயது வரம்பு: 01.04.2022 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 500
வயது வரம்பு: 01.04.2022 தேதியின்படி 21முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 36,000
கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.