December 4, 2025, 12:49 PM
26.2 C
Chennai

திருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

Vijayakanth STalin - 2025தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது…  விஜயகாந்த உடல் நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். அரசியல் குறித்து பேசவரவில்லை என்று கூறினார்.

நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை,. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தானே களம் இறங்கி, நேரில் அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு தமிழகத்தை கூட்டணி பேரங்களால் தொற்றிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியல் தலைவர்களும் பயங்கர சுறுசுறுப்பாக உள்ளனர். கூட்டணி பேரங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், தேமுதிக., இன்னமும் இழுபறியில் உள்ளதால், கூட்டணிப் பேச்சும், அதற்காகக் காத்திருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கும் இட ஒதுக்கீடும் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்னும் சேரவில்லை என்பதால், திமுக., சற்றே உஷார் அடைந்துள்ளது.

விஜயகாந்த் இன்னமும் சவ்வ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால், நேற்று திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து, அரசியல் பரபரப்பு நிலவும் நேரத்தில் அரசியலைப் பேசாமல் என்ன வெட்டிக் கதை அளக்கவா வந்தேன் என்று மூஞ்சியில் அடித்தது போல் செய்தியாளர்களிடம் கேட்டுவிட்டுச் சென்றார்.

இதனிடையே, இன்று காலை ரஜினி வந்து சந்தித்தார். ஆனால், அவர் இதில் அரசியல் இல்லை, வெறுமனே வந்து உடல் நலம் விசாரித்தேன் என்றார் . ஆனால் அவரது பேச்சை எவரும் நம்பத் தயாரில்லை.

Vijayakanth stalin meet - 2025

இப்போதும் ஒரு அரசியல் தலைவரின் பேச்சை மக்கள் நம்பத் தயாரில்லை. அது மு.க.ஸ்டாலின். இன்று அவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரிடம் கேட்டபோது, அரசியல் எல்லாம் ஒன்றும் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்றார்.

எனினும் தேமுதிகவை திமுக., முயன்று வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாமக., தான்வெளியே போயிற்று… விஜயகாந்த் ஆவது உள்ளே வரட்டும் என்று, ஸ்டாலின் நினைப்பதால், கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் விஜயகாந்த் வீட்டுக்கு வந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னர், விஜயகாந்த்தை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தேமுதிக.,வின் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வரும் சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநாவுக்கரசருக்கு கொடுத்த அசைன்மெண்ட் தோற்று விட்டதால், தானே நேரடியாகக் களம் இறங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதனால்தான் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசியுள்ளார் ஸ்டாலின். இது, கூட்டணிப் பேச்சாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

Topics

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,

Entertainment News

Popular Categories