October 21, 2021, 8:16 am
More

  ARTICLE - SECTIONS

  தேசிய குடிமக்கள் பதிவேடு… ஏன் அவசியத் தேவை?!

  CAA அமித் ஷாவின் கையில் இருந்து வெளி வந்திருக்கிறது. NRC காலத்தின் கட்டாயம்.. இதைப்பற்றி எழுதிவிட நிறைய படித்துக்கொண்டு , இருந்தேன். இதைப்பற்றி படித்தால்.. ஏன் இது தேவை என்பது புலப்படும்.

  nrc - 1

  CAA அமித் ஷாவின் கையில் இருந்து வெளி வந்திருக்கிறது. NRC காலத்தின் கட்டாயம்.. இதைப்பற்றி எழுதிவிட நிறைய படித்துக்கொண்டு , இருந்தேன். இதைப்பற்றி படித்தால்.. ஏன் இது தேவை என்பது புலப்படும்.

  சரி.. இது தேவையில்லை என்றே வைத்துக்கொள்வோம். இப்படி தேவையில்லை என்றால்.. பெருந்துறை, திருப்பூர் வரை வந்துவிட்ட பங்க்ளாதேஷிகளை என்ன செய்வீர்கள்..? மாற்று மத ஆசாமி என்பதால் எல்லாம் எப்படி சரி ஆகும்..? நீங்கள் வளமான துபாயில் இப்படி நுழைந்து பாருங்களேன்.. காயடித்து கையில் தந்து அனுப்பி விடுவார்கள்.

  அப்போ இது தேவை.. ஏன் உன் நிலம், உன் வேலை, உன் உயிர் போன்ற பலதும் இப்படியான பங்க்ளாதேஷிகளால் ரோஹிங்கியாக்களால் கேள்விக்குறியாகும்போது.. இன்று நீ கல்லெறிய நினைக்கும் கல்லெறியும் போலீஸிடம் தான் போக வேண்டும்.

  nrc assam - 2

  இரண்டு..நீ இதைப்பற்றி சரிவர தெரிந்து கொள்வதில்தான் உன்தேசத்தின் இந்திய ஆன்மா உயிர்ப்போடு இருக்கும். இல்லை.. இப்படியானவரகளின் சதவீதம் அதிகமாகும் போது.. பஸ் எரிப்பு தாண்டி பயணிகளும் எரியலாம்.. இதற்கான காரணம் கடைசியில் சொல்கிறேன்.

  மூன்று, பொதுச்சொத்தை நாசம் பண்ணுவதற்கு பின்.. எந்த உண்மையும் இல்லை. தூண்டல்தான் இருக்கிறது.பொய்யான நேரேடிவ்தான் இருக்கிறது.
  .
  சரி.. CAA ஒரு பக்கம்.. இப்படியானவர்களை கண்டறிய NRC தேவைதான். ஆனால். காங்கிரஸ் பங்க்ளாதேஷிகளுக்கு எல்லாவித ஆவணங்களும் தந்து அஸ்ஸாமில் அவர்களை 40 சதம் ஆக்கி விட்டிருக்கிறார்கள். இந்த நிலமையில் அஸ்ஸாமியர்கள்.. ஹிந்துவோ முஸ்லிமோ.. பங்க்ளா எவனும் வராதே.. என் மொழி, என் கலாசாரம், என் நிலம் எல்லாம் பறிபோனது போல் எவருக்கும் ஆகவேண்டாம் என்பதே இதை எதிர்க்கிறோம் என்பது சரியானது. இதை வைத்து மும்பையில் போராடுவது லேசான காமெடி.

  திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தராதவனும், பீஹாரி என் ரேஷனை தின்று விடுவான் என்பவர்களும், பார்ப்பான் தமிழனே இல்லை எனும் ஆந்திர நாதஸ் பார்ட்டிகளும், இதை ஆதரிக்கும் போது ஏன் இப்படி சிரிப்பு வருகிறது என்பதை கண்டுபிடித்து விட்டால்.. நீயும் என் உடன் பிறப்பே.

  nrc 2 - 3

  NRC யின் சரித்திரம் அத்தனை அற்புதமாய் இல்லை. அஸ்ஸாமில் கணக்கெடுக்கிறார்கள் என்று ஒரிசா, பெங்களூர் போன பங்க்ளாதேஷிகளை எப்படி கணக்கில் கொண்டு வர.. ? இதை கணக்கெடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால்.. இதை ஒரு நாள் முடிவில் முடித்து.. பங்க்ளாதேஷிகளை நாடு கடத்துவதில் இருந்து, இவர்களை வேலைக்கு வைத்தவர்களின் தொழில்களை முடக்கி தண்டனை தருவது போன்றவைதான் இதனை கட்டுப்படுத்தும். இதனை எப்படி அமல்படுத்துவது என்பதில்தான் அமித்ஷாவின் வெற்றியே.இங்குதான் மிகப்பெரிய சவாலே அரசுக்கு..

  இதனால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை. இது அவர்களுக்குமே தெரியும். வேண்டுமென்றே fear monger ஆசாமிகளின் நேரேடிவ்தான் இப்போது லிபரல்களையே திகைக்க வைத்திருக்கிறது. காரணம் செக்யூலரிசத்தை தூக்கி எறிந்துவிட்டு, அரபியில் எங்கள் கடவுள் தவிர வேறு இல்லை என்கிற வாசகம் எழுதிவிட்டு, பஸ்ஸை கொளுத்துவது புனிதமான பாஸிஸம். இதுதான் மதப்போரின் நவீன முகம். இதை ஜெலட்டின் குச்சி என்போரின் வாயில் க்ரினேடை மதம் பார்த்து இவர்கள் அடைக்கும் நாளில்.. இந்திய தேசம் ஆன்மாவை இழந்தும் இறந்தும் போயிருக்கும். உன் மதம் மட்டுமே உன்னை காப்பாற்றலாம். உன்னை சாகடிக்கலாம்.. நிஜமான செக்யூலரிசம் இறந்த கல்லறை மீதே இந்த வன்முறை நடக்கும். இதற்கான இன்றைய காரணம் NNN தான்.நாளை பர்கா லடிகா போன்ற பாஸிஸ்டுகள் கையில். இதை உடைத்தே தீரவேண்டும் அரசு.

  சபரிமலை போராட்டத்தின் போது எத்தனை பஸ் எரித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், இன்று பொதுச்சொத்தை நாசம் விளைவிக்கும் பலரையும் காப்பாற்றும் NNN களை.. பிரிதொரு நாளில் மதம் பார்த்து மறந்து விடுவார்கள்.

  ஆனால் இந்த தேசம் தன் இந்திய ஆன்மாவை மறந்து மயான அமைதி தேசமாக ஆகிவிடும். இதுதான் காரணமே. இதை தடுக்கவே மிக மிக பலமான கட்டுக்கோப்பான மக்களின் தினப்படிகளை பாதிக்காதவகையில் NRC தேவைதான்.

  • பிரகாஷ் ராமஸ்வாமி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-