October 22, 2021, 3:52 am
More

  ARTICLE - SECTIONS

  திரௌபதியும் ஜேஎன்யூ.,வும்!

  எப்போதுமே சரித்திரங்கள் சொல்வதுண்டு. அடக்குமுறை மற்றொரு புரட்சியாலேயே விரட்டப் படும் என்று! சமீபத்திய இரண்டு உதாரணங்கள்தான் திரௌபதியும் ஜேஎன்யுவும்.,

  draupadi - 1

  எப்போதுமே சரித்திரங்கள் சொல்வதுண்டு. அடக்குமுறை மற்றொரு புரட்சியாலேயே விரட்டப்படும் என்று!

  சமீபத்திய இரண்டு உதாரணங்கள்:

  1.திரௌபதி…
  திரௌபதி என்ற திரைப்படத்திற்கான அமோக ஆதரவும், அதற்கு எதிராக ‘சாதியம் கட்டவிழ்த்து விடப்படுகிறது’ என்று இத்தனை நாள் சாதியை வைத்து அரசியல் வியாபாரம் செய்தவர்களின் கதறலும்!….

  இவர்கள் படமெடுக்கலாம், ஜாதிக்கு எதிர் என்று கூறி தங்கள் ஜாதியை உயர்த்திப் பிடிக்கலாம், மேல் ஜாதி என்று கதாபாத்திரங்களை வைத்து பிராமணனையும், தேவரையும், கவுண்டர்களையும் இழிவு படுத்தலாம்….. அது சாதியத்தில் வராதாம்…

  தி.க. ராமகிருஷ்ணன் போன்ற போலி ஆசாமிகளுக்கு இது போல மற்ற சாதியினரை இழிவு படுத்தும்போது மிக்சர் சாப்பிடுவாராம், திரௌபதிக்கு எதிராக புகார் கொடுப்பாராம்…

  யாரெல்லாம் எதிர்க்கிறார்கள்? “கவுண்டனை வெட்டு, கவுண்டன் பொண்ணைக் கட்டு” என்று கோவையில் மேடையில் ஒரு புறம்போக்கு பேசினபோது கைதட்டிய அதே கூட்டம்…

  மருத்தவர் ஐயா, யுவராஜ் போன்றவர்களின் கெடுபிடி எதிர்ப்பால் மட்டுமே அடங்கிப் போயிருக்கின்றனர் இந்த கும்பல்… இல்லையென்றால் இந்நேரம் வெறியாட்டம் ஆடி இருக்கும் இந்த கும்பல்…

  உங்களுக்கு என்ன குறை?… உங்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது… மற்றவன் 100 மார்க் வாங்கினால், நீ 35 மார்க் எடுத்தாலுமே போதும்! உனக்கான இலவச படிப்பு, அரசு வேலை வாய்ப்பு என்று அரசு உன்னை எழுபத்தி ஐந்து வருடங்களாக, அடுத்த சாதிக்காரன் வரிப்பணத்தில்தானே உன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது?

  உன் தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால், திரௌபதி போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெறும்…. பஞ்சுக் கிடங்கை தீ மூட்ட ஒரு திரௌபதி தீக்குச்சி போதும்…

  அடங்கிப் போகச் சொல்லவில்லை உன்னை… அடக்கமாக இலவசங்களை அனுபவித்துப் போ, என் செலவில் என்று மட்டுமே சொல்கிறோம்…. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது… நிரூபிக்காதே, …. வெளியில் வந்தால் சூப் செய்து உண்ணப் படுவாய்!…

  delhi jnu 1 - 2

  2. ஜே என் யூ டெல்லி:
  நேரு என்ற பெயரில் தொடங்கப் பட்ட எந்த துறையுமே ஜொலிக்கவில்லை… வருட ஹாஸ்டல் ரூம் வாடகை ₹100, மாதம் மெஸ் பில் ₹300 க்கு அரசு தருவதால் பத்து வருடம் 15 வருடம், தலை சொட்டை விழுந்தும் மாணவர்களாகவே ஜேஎன்யூ உள்ளே வலம் வரும் இடது சாரி அமைப்புகளின் அடியாட்கள் கூட்டம்…

  சிரியா, ஈராக் பிரச்னையா? பல்கலை ஸ்ட்ரைக்… டெல்லியில் மாசு… ஸ்ட்ரைக்… தொழிலாளருக்கு கூடுதல் போனஸ் வேணுமீ… ஜேஎன்யூ ஸ்ட்ரைக்… இந்த நாய்கள் விவசாயியின் தக்காளி விலை ₹4 க்கு விற்றால் குரல் கொடுப்பதில்லை…. வெங்காயம் கிலோ ₹2க்கு விற்றால் போராடுவதில்லை. ஆட்டோக்காரன் மீட்டர் போடாமல் ஆட்டோ விலையை கூலியாக கேட்கும்போது போராடுவதில்லை…

  இவர்களின் எரிச்சல் இடது சாரி எரிச்சல்… ‘என்னடா இது? தேசம் ஒழுங்கா போய்க்கிட்டு இருக்கு? டிமானி வந்தது, ஜிஎஸ்டி வந்தது, காஷ்மீர் பில் வந்தது, குடியுரிமை சட்டம் வந்தது…. நம்மால் இனி எப்படி அரசியல் செய்ய முடியும்?’… என நினைத்து சென்ற வாரம் டெல்லியை கலவர பூமியாக்கினார்கள்…. கல் எறிந்து தாக்கினார்கள்….

  போலிஸ் உள்ளே சென்று செமையாக கவனித்த போது ‘ஜனநாயகம் செத்துப் போச்சு’ எனக் கதறினார்கள்… கூடவே போலிஸ் அடிப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இரக்கம் தேடப் பார்த்தார்கள்…

  ஆனால் சமூக வலைத்தளங்கள் இவர்களது அராஜகத்தை முழுவதுமாக வெளியிட்டு, இவர்கள் முகத்திரையை கிழித்துப் போட்டார்கள்…

  தொடர்ந்து, இரண்டு நாள் முன் முகமூடி அணிந்த சிலர் இவர்களை வெளுத்தபோது, இவர்களை தூண்டி விட்டு பின்புலமாக இருந்தவர்கள் ‘குய்யோ முறையோ’ என்று கத்தத் தொடங்கி விட்டார்கள்…

  இழப்பதற்கு எதுவுமில்லை என்று புறப்பட்டால் அராஜகங்கள் தலைதெறிக்க ஓட வேண்டி வரும் என்பதற்கு மேற்சொன்ன இரண்டும் சாட்சி!….

  விஷச் செடியை வளர்த்தவர்களுக்கான விஷம் அதே செடியிலிருந்தே கொடுக்கப் படுவதில் எனக்கு மகிழ்ச்சியே!…

  இனி வரும் காலங்களில் திரௌபதிகளையும், முகமூடிகளையும் அதிகம் காணலாம்!…

  களைகள் மெல்ல மெல்ல நீக்கப்படும்… விஷச் செடிகள் அகற்றப்படும்!….

  • டிமி!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-