
இன்று மறைந்த தேசிய தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்
இவர் இலங்கைக்கு தமிழர்களுக்கு சொந்தமான கட்சத்தீவை கலைஞர் தாரை வார்த்துக் கொடுத்த போது எதிர்த்து போராடியவர். இஸ்லாமிய பயங்கரவாதி பாட்ஷவின் தாக்குதலில் தமிழகத்தில் முதன் முதலில் ரத்தம் சிந்தியவர்.
ஜனாகிருஷ்ணமூர்த்தி 1928 மே 24 அன்று மதுரை நகரில் ஒரு வழக்கறிஞரின் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் தலைமுறை வழக்கறிஞர்.
பொருளாதாரத்தை பிரதானமாகவும், வரலாற்றை துணை நிறுவனமாகவும், அரசியலை ஒரு சிறப்புப் பாடமாகவும் படித்துப் பட்டம் வாங்கியவர்.
1940 – மதுரை நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அறிமுகம்
1945 – RSSல் 3 ஆண்டு பயிற்சி
1948-1951 – பிரச்சாரக் (மதுரை)
பின்னாட்களில்- ப்ராந்த பௌத்திக் பிரமுக்
1965- அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான குருஜி கோல்வால்கர் அவர்களது விருப்பத்தின் பேரில் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்தார்
1968 – பண்டிட் தீனதயாள் உபாத்தியாய அவர்களின் கொலைக்குப் பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது அழைப்பின் பேரில், தனது இலாபகரமான சட்ட வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு பாரதிய ஜன சங்கத்தின் முழுநேர பணியாளராக ஆனார்
1975 – ஆண்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அவர் தமிழகத்தில் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளராக இருந்தார்
1977 – பிஜேஎஸ் ஜனதாகட்சி-யில் இணைந்தபோது, அவர் ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத்தின் உறுப்பினராகவும், அந்தக் கட்சியின் தமிழக பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்
1980 – பாஜக உருவானபோது, பாஜகவின் நிறுவனசெயலாளர்
1983 – பொதுச் செயலாளர்
1985 – துணை தலைவர்
1980 – 1990: நான்கு தென்னிந்திய மாநிலங்களின் பொறுப்பாளர் (கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா & ஆந்திரா)
1993 முதல் டெல்லியில் அறிவுசார் கலங்கள், பொருளாதார, பாதுகாப்பு, வெளியுறவு போன்றவற்றின் பொறுப்பாளராக இருந்தார்
1995 முதல் தலைமையகத்தின் பொறுப்பாளர், செய்தித் தொடர்பாளர்
மார்ச் 2001 – ஜூன் 2002: பாஜகவின் அகிலஇந்தியதலைவர்
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் சட்டத்துறை அமைச்சராக சிலகாலம் இருந்தார்.
காமராஜருக்குப் பிறகு தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக பதவி வகித்த ஒரே தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பிறந்த தினமான இன்று அவரது பெருமைகளை நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறோம்
- பாரதராமன்