சமையல் நிபுணர் செல்லப்பாவின் மரணம்! ‘பெட்’டில் சயனித்து உறங்கிப் போன உண்மைகள்!

Published:

chellapa
chellapa

வரதராஜன் சூசகமாய் சொன்னபோது வானத்துக்கும் பூமிக்குமாய் எகிறிக் குதித்தார்கள்! அவர் சுட்டிக்காட்டிய நண்பர் செல்லப்பா மரணித்த போது வாய் மூடி மௌனமாக உண்மைகளை மருத்துவமனை பெட்டில் படுக்க வைத்து கொரோனாவுக்கு பலியிட்டு குழிதோண்டி ‘தூக்கி வீசி’ப் புதைத்துவிட்டார்கள்! 

இப்படித்தான் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதற்கு காரணம் டிவி செய்தி வாசிப்பாளரும்  நாடக கலைஞருமான டிவி வரதராஜன் வெளியிட்ட ஒரு வீடியோவும் அதற்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் காட்டிய ரியாக்சனும் தான்!

குரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்தில் நல்ல விதமாகவே, அதுவும் ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் ஆதரவாளரான டிவி வரதராஜன், தம் நண்பரொருவர் கொரோணாவுக்கு சிகிச்சை பெற படுக்கை எதுவும் கிடைக்காத நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்க  சிரமத்தைச் சந்தித்ததாக ஒரு கருத்தை தெரிவித்தார். தமது யூடியூப் பக்கத்தில் அது குறித்த வீடியோவை பகிர்ந்து கொண்டு தாம் மேல் மட்டம் வரை சென்றும் இயலாத சூழ்நிலையை சந்தித்ததாகவும் எனவே சாதாரண மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்களை தெரிவித்திருந்தார்!

அவர் கருத்து தெரிவித்த விதம் வேண்டுமானால் நாடகத்தனமாக உணர்ச்சியை கிளப்பும் வகையில் தெரிந்திருந்தாலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்திற்கு பயனுள்ளவையே! 

இருப்பினும் வரதராஜன் கொடுத்த நாடகத்தனமான ஓவர் ரியாக்சன் போல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஓவர் ஆக்ட் செய்து  சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர் களுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்! வாய் திறந்து சொன்னாலே வழக்கு என்று அப்பாவிகளை அச்சுறுத்தும் போக்கு அதிமுக அரசு ஒன்றும் குறைந்ததல்ல என்பதை விஜயபாஸ்கர் காண்பித்திருக்கிறார்

சமூகத்துக்கு அச்சுறுத்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த திமுகவினர் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்ய முடியாத அதிமுக அரசு அப்பாவிகள் மீது பாய்வது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இந்நிலையில் டிவி வரதராஜன் சொன்ன அந்த நண்பர் சமையல் கலை நிபுணர் செல்லப்பா என்பது தெரிய வந்தபோது ஒட்டுமொத்த சமூகமும் வாய்மூடி மௌனியாக உள்ளுக்குள் அழுது தீர்த்தது என்றுதான் சொல்லவேண்டும் 

சென்னையை சேர்ந்த சமையல் நிபுணரும் காண்ட்ராக்டருமான செல்லப்பா சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்றும் எந்த ஒரு பெரிய திருமணம் என்றாலும் அவருடைய சமையல்தான் நடக்கும் என்றும் கூறி, சமூக வலைதளங்களில் பலர் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் தங்கள் இல்லத் திருமணங்களில் இவ்வாறு அவர் சமாளித்தார் என்றும் எவ்விதத்தில் எல்லாம் எங்களுக்கு உதவினார் என்றும் பலரும் பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர் 

சமையல் செல்லப்பாவின் மறைவு செய்தி வாசிப்பாளர் வரதராஜனுக்கு மட்டுமின்றி அவருடைய சமையலை ருசித்து சாப்பிட்ட அனைவருக்குமே அதிர்ச்சியான செய்திதான்!

அவ்வகையில் சமூகத் தளங்களில் பகிரப்பட்ட கருத்துகளில் சில 

chellappa
chellappa

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் செல்லப்பாவின் உயிரை கொரோனா கொண்டு போய்விட்டான்… இவருக்கு தான் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை என செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குறிப்பிட்டிருந்தார்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த செல்லப்பா மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் வரதராஜன் ஒரு பிரச்சனையை கொண்டு வெளிப்படுத்தி இருந்தார்..

நெருங்கிய ஒருவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றபோது, அங்கே பெட் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டனர் என்று வீடியோவில் கண்ணீர் மல்க கூறியிருந்தார். அந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டது..

பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.. அதெப்படி பெட் இல்லை என்று சொல்லலாம் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன..

தவறான தகவலை பரப்பினால் வழக்கு பாயும் என்ற வார்த்தைகளும் வந்து விழுந்து.. வழக்கும் பின்னாடியே வந்து சேர்ந்தது. இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதைவிட, வரதராஜன் பெட் கேட்டாரே அது இந்த செல்லப்பாவுக்குதானாம்..

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இவர் மயிலாப்பூரில் வசித்து வந்தார். சமையல் கலை உலகின் சக்கரவர்த்தி.. சமையல் கலைகளில் பிரபலமடைந்த ஒருசிலரில் செல்லப்பாவும் ஒருவர்.

எந்த பிரபலம் வீட்டு கல்யாணம் என்றாலும் அங்கு செல்லப்பாவின் சமையல்தான்… ஒரே நாளில் 50 கல்யாண வீட்டில் சமைக்ககூடிய அளவுக்கு இவர் திறமை வாய்ந்தவராம்..

அமைதியான டைப்.. கல்யாண வீடுகளில் செல்லப்பா என்றாலே குஷியாகி விடுவராம்.. வயிறார சாப்பிட்டு மனசார செல்வார்கள். ஒரு கோடிகல்யாணம் நடத்தி வைத்திருக்கிறார் என்றால் எப்படியும் 40 ஆயிரம் பேருக்கு மேல் வேலை தந்திருக்கிறார் என்றே அர்த்தம்.

சபரிமலையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 3 வேளையும் சாப்பாடு போட்டவர்.. இவருக்கு எப்படி தொற்று பாதித்தது என்றே தெரியவில்லை.. இந்த மே மாத ஆரம்பத்தில்கூட அவர் சுறுசுறுப்பாகவும், பிஸியாகவும் இருந்திருக்கிறார்

வயது முதிர்ந்தவர்களை தாக்கும் என்பதே கொரோனாவின் அடிப்படை தன்மை.. அந்த வகையில் செல்லப்பாவையும் தாக்கி, இறுதியில் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. இன்று செல்லப்பா இறந்து விட்டார் என்றாலும், அவரது கமகம சமையல் என்றென்றும் மணம்வீசி கொண்டே இருக்கும்!

chellappa
chellappa

அன்பு மக்களே வணக்கம் இவர்தான் செல்லப்பா சமையல் கலை உலகின் சக்கரவர்த்தி   நேற்று குரானா என்னும் கொடிய அரக்கன் எனும் நோயால் இவர்  உயிர் பிரிந்தது

முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் பெட் (அட்மிஷன்)கேட்டது இவருக்கே! இவரது இழப்பு சமையல் உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் 

சென்னையில் உள்ள பிரபலங்கள் அனைவரும் இவர் அறிந்தவரே இவருடைய ஆளுமையின் கீழ் ஒரே நாளில் 50 திருமணங்கள் செய்யக் கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர்! ஒரு திருமணத்திற்கு 200 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 50 திருமணத்திற்கு 10,000 பேர்கள் வேலை செய்வார்கள் சென்னையில் உள்ள மிகப்பெரிய திருமண மண்டபம்  அனைத்தும் இவர் அறிந்ததே! 

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதுவரையிலும் ஒரு கோடி திருமணங்களுக்கும் மேல் திருமணம் செய்து நடத்தி சிறப்பாக செய்து கொடுத்தவர்! பழகுவதில் இனிமையானவர் யாரிடத்திலும் அதிர்ந்து பேசாதவர்! திருமணத்தில் செல்லப்பா சார் சமையல் என்றால் மக்கள் அனைவரும் நிம்மதியோடு திருமணத்திற்கு வந்து அறுசுவை உணவு உண்டு விட்டு செல்வர்

 எத்தனையோ இலவச திருமணங்களுக்கு தன் சொந்த செலவில் அருசுவை உணவு வழங்கியவர்  நேரடியாகவோ மறைமுகமாகவோ 50,000 பேருக்கு மேல் அவர்களுக்கு வேலை கொடுத்தவர் அதோடு உணவும் அளித்தவர்  

சினிமா நட்சத்திரங்கள் அரசு பதவியில் உள்ள பெரிய  அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் இன்னும் எத்தனையோ அதிகாரிகள் என பலரும் இவர் சமையலை உண்டு ரசித்தவர்கள்… எண்ணற்ற தொண்டு நிறுவனங்களை நடத்தியவர் பல திருமணங்களுக்கு தலைமையேற்று தாலி எடுத்துக் கொடுத்தவர் சபரிமலையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதான கூடத்தை மூன்று வேளையும் உணவு வழங்கியவர்…  எண்ணற்ற பல முதலாளிகளை உருவாக்கியவர்

எத்தனையோ பேர்களுக்கு வாழ்வளித்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர்! தெய்வம் அவரை நேரடியாக மோட்சத்திற்கு கொண்டு செல்லட்டும்! எனக்கு தெரிந்தது சில எனக்கு தெரியாதது இன்னும் பல……….. 

ஆகவே கொரோனா என்னும் நோய் வராமலிருக்க முகக் கவசங்கள் அணிந்து கொண்டு அனைவரும் அரசாங்க சொல்படி கேட்டு வீட்டிற்குள்ளே அனைவரும் இருக்கவும் இப்படிக்கு உங்கள் நன்றி உள்ளவன்

Related articles

Recent articles

spot_img