December 11, 2025, 8:08 PM
26.2 C
Chennai

நீட்- மரணம்: சில கேள்விகள் பல பதில்கள்!

ariyalur anitha - 2025

நீட் தேர்வு வந்ததால், ப்ளஸ்டூ வில் நிறைய மதிப்பெண் பெற்றும், தன்னால் வெற்றி பெற இயலாத சோகத்தில், அனிதா என்ற சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

1.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
+2 ல 1200 க்கு 1176 அதாவது 96% மதிப்பெண் எடுக்க முடிந்தவரால், நீட் தேர்வில் எடுக்க முடிந்தது வெறும் 86 மதிப்பெண்கள் தான். அதுவும் 720 க்கு.
ஏன் இந்த நிலை? இத்தனைக்கும் 55% கேள்விகள் +1 பாடத்திலும், 45% +2 பாடத்திலும் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து இருந்த நிலையில் எப்படி இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தான் இவர் பெற்றார்?! காரணம் இவர் படித்தது அரசு பள்ளி இல்ல..Raja vignesh என்ற தனியார் பள்ளி. தமிழ்நாட்டில் எத்தனை தனியார் பள்ளில +1 பாடம் நடத்துறாங்க..? உங்கள் சிந்தனைக்கே விட்டுறேன்.

2.இன்று அவரது சாவில் அரசியல் பண்ணும் கட்சிகள் Psg, meenakshi, SRM மெடிக்கல் காலேஜ்கள் ₹கோடி கணக்கில் மெடிக்கல் சீட்டை விற்ற போது ஏன் வாய் திறக்கல?
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எம்புட்டு நேர்மைனா 1f447 - 2025?
விஜயகாந்த் மச்சானுக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு,
பச்சமுத்து காலேஜ் தான் SRM னு சொல்லி தெரிய வேண்டியதில்லை….ராமதாஸ் சொந்தமா மெடிக்கல் காலேஜ் இருக்கு ….Dr. MGR University ல பெரும் பங்கு யாருதுனு ஒங்களுக்கு தெரியும். இதுல என்னடா ஒரு கட்சி மட்டும் வரலயே. அவனுக அம்புட்டு யோக்கியனா இல்ல மறைக்குற நீ அயோக்கியனானு கோபப்பட வேண்டாம்..
ஜெகத் ரட்சகன் தொடங்கி மெடிக்கல் காலேஜ் இல்லாத திமுக முக்கிய புள்ளிகள் யார் இருக்கா??!

3.இப்போது கூப்பாடு போடுற தமிழக ‘அற நெறி’ ஊடகங்கள் அப்போது ஏன் கள்ள மெளனம் சாதித்தன?
கோவை Psg College ல டொனேஷன் மட்டுமே ₹75 லட்சம் வாங்குனாங்க.. Meenakshi College ல ₹60 லட்சம், SRM சொல்லவே வேணாம் உங்களுக்கே தெரியும். அப்ப ஏன் எந்த ஊடகமும் இதை பொது விவாதத்திற்கு எடுக்கல. அட உண்டியல் கட்சின்னு சொல்ற கம்யூனிஸ்ட் கூட மெளன விரதம் இருந்தார்களே ஏன்? Cheque வாங்கிட்டாங்களா..? அதுசரி பச்சமுத்து நடத்துற SRM medical college ன் பகல் கொள்ளையை அவரது மகன் நடத்துற PuthiyathalaimuraiTV வெளிச்சம் போட்டு காட்டும் என நினைத்தால்.. நாம் தான் குருடர்கள். (இந்த இடத்தில் ஒங்களுக்கு தனி ஒருவன் படம் நினைவுக்கு வந்தால்.. உண்மையை உணர தொடங்கி விட்டது உங்க மனது)

4.மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தது சரின்னு வச்சுக்குவோம். ஆனா SRM போன்ற கல்லூரிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்க காரணம்?
சரி மாணவர்கள் எதிர்த்தார்கள் ரைட்டு. இந்த SRM ஏன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினான்?? மன்னிக்கவும் அவன் போராடியது நீட் தேர்வை எதிர்த்து இல்ல நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடந்தா தன் management quota seats எப்படி அதிக விலைக்கு விற்பது..! அதனால் அவனுக்கு மட்டும் விலக்கு கேட்டு போராடினான். இதே போன்று மத்த கல்லூரிகள் ஒன்று சேர்ந்து மறைமுகமாக நீட் தேர்வை தடுக்க பெரிய லாபி செய்து தோற்றார்கள் என்பதே உண்மை. ஏன்?? பின்ன ₹கோடி கணக்கில் விற்ற management seats களை இன்று நீட் மூலம் வெறும் ₹12 செலவில் மாணவன் படிக்க முடிந்தால் அவனுக பொழப்பு என்னாவுறது..

5.உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?
இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம்.. கடந்த வருடம் medical seat பெற்ற sc மாணவர்கள் 94. இந்த வருடம் 135 இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??!
அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான் brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..

6.நீட் தேர்வில் பிற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? அங்கு ஏன் நீட் எதிரா ஒரு போராட்டமும் இல்ல??
தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது. ஆனா கேரளா உட்பட எந்த மாநிலமும் இந்தியை எதிர்க்கல. நம்மில் எத்தனை பேருக்கு நவோதயா, இ-கல் வித்யாலயா பற்றி தெரியும். தரமான சிபிஎஸ்இ கல்வியை மிக குறைந்த செலவில் அளிக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனத்தை ஏன் தமிழ்நாடு மட்டும் ஏற்கல?? அப்ப திமுக கட்சிக்காரர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தலாமா?? உங்க சிந்தனைக்கே விட்டுறேன்

7. நீட் தேர்வில் அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நோக்கம் என்ன?
நீட் தேர்வு வந்தால் தங்கள் உறவினர், கட்சிக்காரர், நன்கொடை வழங்கும் பெரு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான் முழு மூச்சாக தமிழக கட்சிகள் எதிர்க்கின்றன. உதாரணம், Psg medical college ல மு. க. ஸ்டாலினுக்கு என்று தனி கோட்டாவே உண்டு, புதுவை ஜிப்மர்ல வைகோவுக்கு ஒரு சீட் உண்டு ஆனா சில லட்சங்கள் செலவோடு.

8.அடுத்து கல்வித்துறை செய்ய வேண்டியது என்ன?
இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவனும்

9.நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கல அல்லது கேட்க முடியல?

10.நீட் தேர்வு என்ற ஒரு பிரச்சனை எப்போது, எதனால், யாரால் முளைத்தது?

9 & 10. இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காத மாணவர்கள் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள்ல இங்க management quota ல செலவு பண்றத விட குறைந்த செலவில் படித்துவிட்டு MCI தேர்வு எழுதி டாக்குடராவது ஏற்புடையதா?? இதனால மருத்துவ தரம் எப்படி இருக்கும். அப்படின்னு சாட்டையடி கொடுத்த பின் தான் வேற வழியின்றி கான்கிரஸ் அரசு நீட் வரைவை உருவாக்கியது.
அதை செயல்படுத்தியது பாஜக அரசு. இதனால தான் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது. ஏன்னா அது எடுத்த நடவடிக்கை மிக சரி.. கட்டுக்கடங்காத management fees, donation இதுல படித்து வர்றவன் எப்படி சேவை மனப்பான்மையோடு இருப்பான்??
இதுக்கு மேலயும் மோடி ஒழிக, நீட் வேண்டாம் என்றால்.. தயக்கமின்றி சொல்வேன் நீங்களும் சந்தர்ப்பவாதி தான் 1f64f - 2025?

கட்டுரை: லெஷ்மணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories