
இன்று சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ள முக்கிய செய்திகளில் லட்ச தீவு கூட்டமும் ஒன்று. முன் ஒரு காலத்தில் சென்னை ராஜதானி ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகள் இன்று கேரள மாநிலத்தில் கீழ் வருகிறது.
மேற்கு அரபிக் கடலில் கொச்சி மற்றும் மங்களூர் துறைமுகத்தில் இடையே முக்கோணம் வரைந்தால் அதில் கடலில் 200 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இத்தீவுகள் வருகிறது.
பெயர் தான் லட்ச தீவே தவிர இவை பொதுவாக 35 தீவுகள் மாத்திரமே இருக்கிறது.இதிலும் சுமார் 10 தீவுகளில் மாத்திரமே மனிதர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் வசித்து வந்தாலும் இந்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்ன பிரச்சினை தற்போது என்றால்….., இதனூடாக ஆண்டு ஒன்றுக்கு 78000 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் மற்றும் போதை லாகரி வஸ்துக்கள் கடத்த படுகிறது என்கிறார்கள். சிக்கலான விஷயமாக நாயகன் பட பாணியிலான வேலைகளை தாராளமாக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும், சமயத்தில் அருகில் இருக்கும் மங்களூர் துறைமுகத்தை விடுத்து கொச்சி துறைமுகத்தை தான் பயன் படுத்துவோம் என்று அடம் பிடிப்பதாக சொல்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் விட கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதனை வேவு பார்க்க அடிக்கடி மர்ம மனிதர்களின் ஆள் நடமாட்டம் தென்படுவதாக பல முறை புகார் அளிக்கப்பட்டும் பினராயி அரசு அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நமது கடற் படை கப்பலின் தகவல்களை திருடப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

போதாக்குறைக்கு ஏற்கனவே இந்த கப்பலில் கணினி மென்பொருள் சார்ந்த பல டிஸ்க்குகளை திருடி செல்லும் முயற்சி நடந்து அந்த மர்ம நபர் பிடிப்பட்ட போது தப்பி விட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் இரண்டு நாட்களில் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்திருப்பதாக பதிவுகள் சொல்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பலவும் மாற்றப்பட்டதாகவும் புகார் உள்ளது.

நாட்டின் மிக முக்கியமான கடற் படை பயிற்சி தளமும் இங்கு இருந்து செயல்படும் வேளையில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த லட்சத்தீவு பகுதிகளையும் அதில் உள்ள மக்களையும் பாதுகாப்பு கருதி மத்திய அரசுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டதை வேண்டும் என்றே திரித்துக் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.