வந்தேறிகளின் வம்புப் பிரசாரம்! விளைவுகள்! உண்மைகள்! (பகுதி 17)

Published:

vantherikaL vambupracharam - 2026

வந்தேறிகளின் வம்புப் பிரச்சாரம்…! விளைவுகள்…! உண்மைகள்!
தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கோமாதா!

வந்தேறிகளின் பார்வை பிராமணர்களுக்கு அடுத்தபடியாக நம் தேசிய பசுக்களின் மேல் விழுந்தது.

“பாரதிய விவசாய முறைக்கு பசுக்களே ஆதாரம். பாரதிய விவசாய அமைப்பை நிர்மூலமாக்க வேண்டுமென்றால் ஒரே வழி பசுக்களை அழிப்பதே!” என்றான் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ராபர்ட் கிளைவ்.

அந்த நேரத்தில் 1760ம் ஆண்டு கல்கத்தாவில் முதல் பசுவதைக் கூடத்தை ஏற்படுத்தினான். ஒரு ஆண்டிற்குள்ளாகவே ஒரு கோடி பசுக்களுக்கு மேல் வதைத்துக் கொன்றதாக வரலாறு தெரிவிக்கிறது. 1910ம் ஆண்டில் 350 பசுவதைக் கூடங்கள் இரவு பகலாக பணி புரிந்து பாரத தேசத்தின் கோ செல்வத்தை நிர்மூலமாக்கின.

தங்களின் அட்டூழியங்களை மூடி மறைப்பதற்கு வந்தேறிகள் பல பொய்களை ஹிந்து சமுதாயத்திற்குள் பரப்பினர். பசுக்களும் மீதி விலங்குகளைப் போன்றதே என்றும் ரிஷிகள் கூட பசு மாமிசம் தின்றார்கள் என்றும் வந்தேறி ஆட்சியாளர் பசுக்களின் மேல் பண்டைக்காலம் முதல் இருந்து வரும் நிஷ்டையைக் குலைப்பதற்காக துஷ்பிரசாரம் செய்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

“இவ்விதமாக இயற்கை எருக்களான பசுஞ் சாணம், பசுவின் சிறுநீர் ஆகியவற்றின் இடத்தில் தொழிற்சாலை எருக்களான யூரியா, பாஸ்பேட் போன்றவை இடம் பிடித்தன. ராபர்ட் கிளைவின் தந்திரத்தின் மர்மம் இதுவே!” என்று “கோ ரக்ஷணை மூலமே தேசப் புனரமைப்பு” என்ற கட்டுரையில் திரு.எம்விஆர் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

பசு என்றால் ஹிந்துக்களுக்குத் தாய். கோ தானம் செய்வது என்பது ஹிந்துக்களுக்கு ஒரு பவித்திர காரியம். நல்லது கெட்டதுகளில் கடைபிடிக்கப்படும் செயல்களில் ஒரு பகுதியாக காளைகளை அவிழ்த்து விடுவதை புண்ணியமாக எண்ணினர். பண்டைக்காலம் முதலே நம் சமுதாய பொருளாதார வாழ்வு முறைக்கு பசு முதுகெலும்பாக இருந்து வந்தது. பாரத தேசம் விவசாய தேசம் என்பதால் பசுச் செல்வமே உண்மையான செல்வமாக கருதப்பட்டது. மகாபாரத காலத்தில் நடந்த பசுக்களைக் கவர்தல் என்றும் போர் முறைகளைப் பற்றி நாமறிவோம்.

ஆனால் பாலைவன மதங்களின் அசுரக் கும்பல் நம் பொருளாதாரச் செல்வமான பசுச் செல்வத்தைப் பார்த்து வியந்து போயின. வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினர். நம் தேசத்தின் விலங்குச் செல்வத்தைக் கண்டு அவர்களின் வாய் ஊறியது. கோ வதையை மிகக் கொடுமையான பாவச்செயலாக எண்ணிய நம் தேசத்திலேயே நம் கோமாதா அவர்களுக்கு உணவானது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரத தேசத்தை ஆக்கிரமித்த ஈஸ்ட் இந்தியாவின் பிரிட்டிஷ் அதிகாரிகளும் பசுக்களை வெட்கமின்றி கொன்று குவித்தனர்.

“முகமதியர் செய்து வரும் கோ வதைகளுக்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இது ஆங்கிலேயர்களான நம்மை நோக்கி குறிவைக்கும் அம்பு! ஏனென்றால் நம் படையினரின் தேவைக்காக நாம்தான் அதிக அளவு ஹிந்துக்கள் பவித்திரமாக நினைக்கும் பசுக்களைக் கொல்கிறோம்” என்று ராணி விக்டோரியா 1893 டிசம்பரில் வைசிராய்க்கு கடிதம் எழுதினாள்.

1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு பசு ஒரு முக்கிய காரணமானது. 1880-94 இடையில் நடந்த மிகப் பெரும் போராட்டம் பசு வதைத் தடை குறித்து நடந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மாநாடுகளில் பங்குகொண்ட காந்திஜி, திலக், வினோபா போன்ற பெருந்தலைவர்கள், “தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தவுடம் முதலில் போடும் கையெழுத்து பசு வதை தடைச் சட்டத்திலேயே!” என்று கர்ஜித்தனர். ஆனால் விடுதலைக்குப் பின்னும் மக்களின் விருப்பம் நிறைவேறவில்லை. தேசிய பசுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

மருத்துவ குணம் மிக்க பஞ்சகவ்யம் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புத்திகூர்மையை அதிகரிக்கும் பசு நெய்யை பல மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சிறந்த பலனளிக்கும் தேசிய பசுக்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

அரசியல் சட்டம் பிரிவு 48ல் பசு வதைத் தடை உள்ளது. பசு மாமிசம் ஏற்றுமதி மீதும் தடை உள்ளது. ஆனாலும் நடைமுறையில் கோ வதையைத் தடை செய்ய இயலாமல் உள்ளோம்.

(நன்றி – ருஷிபீடம் – ஜூலை, 2018)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img