spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவீரசைவ லிங்காயத்துகள் ஹிந்துக்களே!

வீரசைவ லிங்காயத்துகள் ஹிந்துக்களே!

- Advertisement -

lingayat

”மூன்று வ்யாஹ்ருதிகள் சேர்ந்த ப்ரணவத்தை மூவா மறைதான் முதலில் சொல்லிற்று”

”யஜுர் வேதத்தின் ருத்ராத்யாயம் இல்லையெனில் ’சிவ’ நாமம் இல்லை”

லிங்க பூஜை, த்ரிபுண்ட்ர தாரணம், பஞ்சாக்ஷரம் – இவற்றை பஸவர் திடீரென்று புதிதாக ஏற்படுத்தினாரா?

12ம் நூற்றாண்டுக்கு முன் இதெல்லாம் கிடையாதா? சரணர் இஷ்ட லிங்கத்தை மையமாக்கிப் பாடினரா? கூடல சங்கமேசுவரரை முக்கியப் படுத்திப் பாடினார்களா? ஏன்? ஆசிரம நியமம் கிடையாது என்றால் ஏன் காவி கட்டுகின்றனர்?

இவர்கள் ப்ரணவத்தை ஏற்கின்றனர்; பஞ்சாக்கரத்தை ஏற்கின்றனர். கூடல ஸங்கமேசுவரரை வழிபடுகின்றனர். லிங்க தாரணம், தாஸோஹம் பாவனை விதிக்கப்பட்டுள்ளது; பஞ்சாசார ஒழுக்கம் உண்டு. உயிர்க்கொலைக்கு இடமில்லை.

அஷ்டாவரண சின்னங்கள் உண்டு. இவர்களது ஷட்ஸ்தலக் கொள்கையின் வேர் பரமேச்வர தந்த்ரம் எனும் ஆகம நூலில் இருப்பதாகச் சொல்வர்.

லிங்காயத்களுக்கு உருவ வழிபாடு உண்டு; இஷ்ட லிங்க பூஜை நாள்தோறும் செய்ய வேண்டும்.குரு வழிபாடு உண்டு; மறுபிறவிக் கொள்கை உண்டு; தல யாத்திரை உண்டு; காவி பூணும் துறவுநெறி உண்டு. பிரணவத்தை ஏற்றுக்கொள்வதோடு, மறுபிறவிக் கொள்கையை நம்பும் எந்த ஒரு பிரிவும் ஹிந்து சமயத்தின் கிளையே.

Jessica Frazier stated that Basava laid the foundations of a movement that united “Vedic with Tantric practice, and Advaitic monism with effusive Bhakt.”

குழப்பம் நேர இடமில்லை. ‘ஹிந்து’ என்பதும் ஆங்கிலேயப் புத்துருவாக்கம் அன்று. தொன்னூல்களிலிருந்து கிளத்த சொல்லே. வடபுலத்தின் பக்தி இயக்ககாலத்தில் பெரும்பான்மைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

பவுத்தரும், சமணரும், சீக்கியரும் போல வீரசைவரும் ஹிந்துக்களே. இந்தியச் சிந்தனை மரபில் தோன்றிய கிளைகள் ‘தர்சனம்’ அல்லது ‘ஆகமம்’ எனும் பெயர்களோடு அங்கீகாரம் பெற்று ஆய்வுக்குள்ளாயின. ’ஸர்வ தர்சன ஸங்ரஹம்’ எனும் அழகான தொகுப்பில் இவற்றைக் காணலாம். கர்நாடக வீரசைவர் எல்லோருமே தாம் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

காஷாய-ருத்ராக்ஷ-தண்ட-பஸ்ம தாரண வேஷதாரிகளாக போஸ் கொடுத்துக் கொண்டு ’நாங்கள் தனி சமயம்’ என்பது நகைப்பையே தருகிறது. பழைய திரைப் பாடல் ஒன்றை நினைவூட்டுகிறது –
இதுவரை ஆண்களைத் தொட்டதில்லை;
பிள்ளை இரண்டுக்குமேல் நான் பெற்றதில்லை.

மலின அரசியல் செய்யும் கட்சிகளுக்கே இதனால் ஆதாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe