Homeகட்டுரைகள்எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-4’; தமிழகம் ஏன் முதலீடுகளை ஈர்க்கவில்லை?

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-4’; தமிழகம் ஏன் முதலீடுகளை ஈர்க்கவில்லை?

- Advertisement -
- Advertisement -

jayalalitha karunanidhi - Dhinasari Tamil

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.

அதில், கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை, தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன, ஏன் பொதுத்துறையை இவர்கள் அன்னியர்களாகக் கருதினார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வர்த்தகத் தலைவர்களுடன் பரிதாபகரமான, வேறுபாடற்ற உறவுகளை ஏன் தமிழக ஆட்சியாளர்கள் கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்ப்போம்.

தமிழக ஆட்சியாளர்களாக இருந்த தலைவர்கள் எல்லாம், வர்த்தகர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தீர்வுகள் இவற்றைக் குறித்து அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியது அவசியம் என்பதைக் கூட உணராது இருந்தவர்கள்.

இதற்கு நேர் மாறாக, குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியையும், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் யோசித்துப் பாருங்கள். இவர்கள் இருவருமே வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள். தகுந்த முதலீட்டாளர்களிடமும் அவர்களின் மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களிடம் கலந்து பேசினார்கள்.

chandrababunaidu - Dhinasari Tamil

சந்திரபாபு நாயுடு அண்மைக் காலத்தில் மேற்கொண்ட பயணத்தின் போது, ஆந்திராவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களாகிய செல்வந்தர்களைச் சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்த திட்டங்களில் பங்கு பெற ஒத்துழைப்பை நாடினார். ரவீந்திரா சன்னா ரெட்டி (ஸ்ரீ சிட்டி), ராமசந்த்ரா கல்லா( அமர ராஜா பேட்டரீஸ்) இருவரும் அவரது வேண்டுகோளை உடனே ஏற்ற என்.ஆர்.ஐ.க்கள்!

மைக்ரோசாஃப்டின் மாபெரும் பரவலாக்கம் ஆந்திராவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தந்திருப்பதுடன், ஹைதராபாத்தில் மேலும் அதிகளவிலான ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிப்பதற்கு உந்துதலாகவும் அமைந்தது. இதற்கு நாயுடு மேற்கொண்ட மார்கெடிங் உத்திகளே காரணமாயின. டாவோஸ் பொருளாதார அமைப்புக் கூட்டங்களில் சர்வதேச தலைவர்களைச் சந்தித்து அளவளாவி, கருத்துக் களங்களில் பங்கேற்று மாநிலத்துக்கு அவர்களின் கவனத்தைத் திருப்பினார்.

இதே நேரம், மற்ற மாநிலங்கள் குறிப்பாக மேற்கு வங்கம் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மெத்தப் படித்த அறிவுஜீவிகளை, வல்லுநர்களை மத்திய மாநில அமைச்சரவையில் இணைத்துக் கொண்டன. ஆனால், தமிழகமோ தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தப் பதவிகளுக்கு முன்னிறுத்தியது. திமுக., தலைவரான மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, நிர்வாகத்தில் மிகக் குறைந்த அனுபவமே கொண்டவர். திமுக.,வை சாதாரணமாகக் கடந்து போன ஜகத்ரட்சகன், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மட்டுமே!

jayalalitha karunanidhi 1 - Dhinasari Tamil

டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்தவர் ரபி பெர்னார்ட். அதிமுக.,வால் நிறுத்தப் பட்டு தேர்தல்களில் வென்று வந்த 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெறுமனே வந்து போய்க் கொண்டிருந்தவர்கள்! இவர்கள் எல்லோருமே, தலைமையின் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாகவோ, அல்லது கட்சித் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தின் காரணமாகவோ மாபெரும் பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்டு, தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள்!

திறன் சார் தலைவர்களை, நபர்களை இந்தக் கட்சிகள் உருவாக்கவில்லை. இன்று இந்தியாவில் பெரிதும் பேசப்படும் ஊழல்கள், குறிப்பாக 2ஜி ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் என இவை எல்லாவற்றிலும், தமிழக அரசியல்வாதிகளின் கரங்களே மேலோங்கியிருக்கிறது. இதற்குக் காரணம், ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப நபர்களை, விசுவாசிகளை மத்தியில் அமைச்சரவையில் அமைத்தது. அல்லது தாங்களே தொழில் துறையில் இறங்கி, அவற்றுக்கு சாதகமாக தொழில்துறையை அதிகாரத்தின் பலத்தில் வளைத்து முறைகேடுகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக் கொண்டது.

இப்படி தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொழில்துறைத் திட்டங்களை வளர்க்காமல், திமுக., காங்கிரஸின் ப.சிதம்பரம் ஆகியோர், பொழுது போக்கு அம்சங்களிலும், மற்ற முறைகேடான நிதி சார்ந்த வர்த்தகங்களிலும் தங்களை, தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்வதில் மட்டுமே கவனத்தைக் கொண்டு செயல்பட்டுள்ளார்களே தவிர, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தமிழக தொழில் சார் கட்டமைப்புகள் ஆகியவற்றில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை.

இவை தவிர இரு பெரும் கட்சிகளான திமுக., அதிமுக., இரண்டின் எதிர்மறை, பகைமை நிலைப்பாட்டு அரசியல், எப்படி மத்திய அரசில் தமிழகத்துக்கான பெரும் தடைகளாக அமைந்தன என்பது குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,939FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Cinema / Entertainment

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

கிளைமேக்ஸை மாத்த சொன்ன விஜய்.. ஹீரோவை மாத்தி ஹிட் கொடுத்த டைரக்டர்!

விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.அப்பொழுது...

Ak கேட்டு ஓகே ஆனாராம் இவர்..! 61 அப்டேட்!

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார்....

சங்கராந்தி வாழ்த்துக் கூறிய பிரபல நடிகர்! குடும்பத்துடன் புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய் தேவர கொண்டாவின் சங்கராந்தி தின புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய்...

Latest News : Read Now...