சீன அதிபரின் அழைப்பை ஏற்று சீனாவின் புகழ் பெற்ற நகரமான உஹான் நகரத்திற்கு சென்ற பாரத பிரதமரை சீன அதிபர் சந்தித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அதோடு அங்குள்ள புகழ் பெற்ற ஹூபே புரவின்சியல் மியூசியத்திற்கு
மோடியை அழைத்து சென்று சீனர்களின் பண்டைய வரலாற்று சுவடுகளை காண்பித்தார்.
மோடியும் அப்படியா என்று தலையாட்டிக்கொண்டா ர். ஏனென்றால் மர மண்டைகளாக இருந்த சீனர்களு க்கு பண்டைய இந்தியாவின் வீரம் செறிந்த தற்காப்பு கலையையும் அன்பு சார்ந்த புத்தரின் கொள்கைக ளையும் போதி தர்மர் சொல்லிக்கொடுத்த பிறகே சீனர்கள் வீரம் பெற ஆரம்பித்தார்கள்.அது வரை எதிரிகளுக்கு பயந்து போய் சுவர் கட்டி வாழ்ந்தவர்கள் தான் சீனர்கள்.
பண்டைய பாரத நாட்டுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் போரை நடத்திய வரலாறு இருக்கிறது.ஆனால் சீனாவுக்கோ மங்கோலியர்க ளுக்கு பயந்து சீன பெருஞ்சுவரை கட்டி வாழ்ந்த வரலாறு தான் இருக்கிறது.மங்கோலியர்கள் என்ற வுடன் தான் நினைவுக்கு வருகிறது.
கிபி 12 ம் நூற்றாண்டில் சீனாவை சூறையாடிய செங் கிஸ்கான் இந்தியாவை மட்டும் எட்டி பார்த்து விட்டு சென்றது பயமா இல்லை பக்தியா என்பது இன்று வரை புதிராகவே இருக்கிறது.இந்தியாவை தாண்டி ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் என்று ஓவ்வொரு நாடுகளை யும் தேடி சென்று சூறையாடிய செங்கிஸ் கான் இந்தியாவுக்குள் நுழையாமல் சென்றதற்கு காரணம் பண்டைய இந்தியாவின் வீரம் செறிந்த வரலா ற்றை அறிந்ததால் தான்!
மாடர்ன் சீனாவுக்கு வேண்டுமானால் வல்லரசு வர லாறு இருக்கலாம்.ஆனால் பண்டைய சீனாவுக்கு அடிமை வரலாறு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நம்முடைய மகாபாரததத்தையே எடுத்து கொள்வோம்
குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்த னர்.என்கிறது மகாபாரதம்.பிராக்ஜோதிச நாடு என்று ஒரு நாட்டை பற்றி மகாபாரதம் குறிப்பிடுகிறது.அந்த நாடு தான் இப்போதைய அஸ்ஸாம் மாநிலமாகும் அந்த நாட்டு மன்னன் பகதத்தன் குருசேத்திர போரில் கௌர வர்கள் படையில் நின்று போரிட்டு அர்ஜூண ன் கையால் மாண்டு போன ஒரு மாவீரன்
இந்த பகதத்தன் தன்னுடைய படைகளுடன் கிராதகர் கள் மற்றும் சீனர்களுடன் வந்து கௌரவர்களின் யானைப்படைக்கு தலைமை தாங்கிப் போரிட்டு அழி ந்து போனான் என்கிறது மகாபாரதம்.இந்த கிராதகர் களை பற்றி சொல்லும் பொழுது கிராத நாடு என்றும் இது இமயமலையை ஒட்டி இருந்த நாடு என்றும் மகாபாரதம் கூறுகிறது.
இந்த கிராத நாட்டை தாண்டி இருந்த சீனர்களை மஞ் சள் இனத்தவர்கள் என்று கூறும் மகாபாரதம் சீனர் களின் இருப்பிடத்தை அடைய இமயமலை வழி யாக செல்ல வேண்டும் என்று கூறுகிறது.ஆக மகா பாரத காலத்தில் சீனர்கள் நாடு கொண்டு ஆளவில் லை கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக தான் இருந்துள் ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு வலுவான தலைவன் வரும் பொழுது தான் அதன் அண்டை நாடுகள் அந்த நாட்டைக்கண்டு அச்சம் கொள்ள ஆரம்பிக்கிறது. நேரு மாதிரி கோமாளிகள் இந்தியாவை ஆளும் பொ ழுது தேடி வந்து அடித்த சீனா மோடி மாதிரி வலுவா ன தலைவர் இந்தியாவை ஆளும் பொழுது ஓடி வந் து சமாதானம் பேசுகிறது.
இப்பொழுது கூட மோடி சீனா சென்றதன் முக்கிய நோக்கமே சீனா இந்தியாவோடு நட்புடன் இருக்க விரும்புகிறது.வாருங்கள் பேசுவோம் என்று சீன அதிபர் அழைப்பு விடுத்ததால் தான் மோடி சென்றா ரே தவிர மோடி ஓடிப் போய் சமரசம் பேச அல்ல.
டோக்லாம் மாதிரி எல்லை பதட்டங்கள் இனி வேண்டாம் வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என் று சீன அதிபர் ஜின்பிங் திடீரென்று மோடியை அழைத்துள்ளார் என்றால் பதட்டத்துடன் இருப்பவர் யார் என்று உலகிற்கே தெரியும்.
ஆனால் ராகுல் என்கிற அரைவேக்காடு ஜின்பிங் அழைத்ததும் மோடி பதட்டத்தில் இருக்கிறார் என்று ட்வீட் செய்கிறார்.அடேய் லூசுப்பயலே..கடந்த இர ண்டு வாரமாக சீன எல்லையில் இந்திய விமானப்ப டை நடத்திய ககன் சக்தி என்கிற போர் ஒத்திகையை பார்த்து சீன அதிபர் வேண்டுமானால் பதட்டமடைய லாம் ஆனால் மோடி எதற்கு பதட்டமடைய வேண்டும்?
ஒருத்தர் ஒரு செயலை திட்டமிட்டே செய்யும்போது அவருக்கு ஏன் பதட்டம் வருகிறது?இதை எதிர்பாரா தவர்களுக்கு வேண்டுமானால் பதட்டம் வரலாம். அ ப்படித் தான் சீனா அதிபர் ஜின்பிங்க்கு பதட்டம் வந்த து அதனால் மோடியை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.இது தான் உண்மை.
அதுவும் எப்படி தெரியுமா?எங்கு தெரியுமா? மக்கள் சீனத்தை வடிவமைத்த மாவோவின் பேவ ரைட் இடமான உஹான் நகரில் வைத்து மோடியோடு பேசிக் கொண்டு இருக்கிறார்.இன்றைய மாவோ என்று சொல்லப்படும் ஜின்பிங். உலகின் மூன்றாவது பெரிய நதியான யாங்ட்ஸே நதிக்கரையில் மோடி யை சந்திக்க தலைநகர் பீஜிங்கில் இருந்து வந்து காத்து இருந்தார் இன்றைய மாவோ ஜின்பிங்.
ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள்..சீனா மாதிரி ஒரு பெரிய நாட்டின் அதிபர் தங்கள் நாட்டை விட சிறிய நாடாக கருதும் இந்தியாவின் பிரதமரை தலைநகருக்கே அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட முடியும்.ஆனால் இந்திய பிரதமர் விரும்பிய இடத்தி ற்கு சீன அதிபர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்
இந்திய பிரதமர் விரும்பிய சீனாவின் கங்கை என்று சொல்லப்படும் யாங்ட்ஸே நதிகரையில் உள்ள உஹான் நகரில் வைத்து சீன அதிபர் மோடியோடு தனிமையாக பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றால் யார் பதட்டத்தில் இருக்கிறார்கள் என்று உலகம் அறிந்து கொள்ளும்.
இந்த உஹான் நகரத்தில் இருக்கும் ஹூபே புரவின் சியல் மியூசியம் சீனர்களின் பண்டைய வரலாற்றை சொல்லும் மியூசியம், இங்கு தான் சீன வரலாற்றை எடுத்துரைக்கும் சியா,சங் மற்றும் சவு ஆட்சிகளை பற்றியும் வசந்த காலமும் இலையுதிர் காலமும் அடுத்து போரிடும் நாடுகள் காலம் என்றுஐந்து கால ங்களின் வரலாற்று சுவடுகளை தேடி பிடித்து வைத் து இருக்கிறார்கள்
சுமார் 2 லட்சம் பொருட்களை சேகரித்து இந்த மியூசி ய த்தில் வைத்து இருக்கிறார்கள்.இந்த பொருட்களை எல்லாம் மோடிக்கு காட்டிக்கொண்டே வந்த ஜின்பிங் இதெல்லாம் 2000 வருஷத்துக்கு முன்பே எங்கள் மன்னர்களின் அடையாளங்கள் என்று சொல்லிக் கொண் டே வர பதிலுக்கு மோடி எங்கள் நாட்டுக்கு வாருங்க ள் 5000 வருசத்துக்கே முன்பே நாங்கள் ஆண்ட வர லாற்றை உங்களுக்கு காட்டுகிறோம்.
அதோடு நீங்கள் எங்கள் நாட்டு படையில் கூலிக்கு மாரடிக்க வந்ததை நாங்கள் காட்டுகிறோம் என்று ஜின்பிங்குக்கு மோடி இந்திய வரலாற்றை கூறுகிறா ர் .பேச்சு வார்த்தை முடிந்த பிறகு சீன அதிபரே முன் வந்து ஒரு பேட்டிக் கொடுத்திருந்தார்.. அதில் அவர் என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய உறவில் புதிய அத்தியாயத்தை துவங்கி இருக்கிறோம் என்று இன்றைய மாவோ மோடியை சந்தித்த பிறகு கூறுகிறார் என்றால் யார் பதட்டத்தில் இருக்கிறார்கள் என்று நீங்களே கூறுங்கள்.. இப்போ தயசந்திப்பு மாதிரியே சுமார் 64 ஆண்டுகளுக்கு முன் இந்திய பிரதமருக்கும் சீன அதிபருக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது
.
அதாவது இதே கால கட்டத்தில் அன்றைய மாவோ வை 1954 ல் பெய்ஜிங்கில் வைத்து நேரு சந்தித்து பேசினார்.கிட்ட தட்ட 4 மணி நேரம் திபெத் பிரச்ச னையை முன் வைத்து நேருவிடம் பேசிய மாவோ பேச்சு வார்த்தை முடிந்த பிறகு இந்தியா பற்றி படு கேவலமாக ஒன்றை சொன்னார் ..அது என்ன தெரியுமா?
சீனத்தில் ‘வேண்டாதவர்களைத் தண்டிப்பதை பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்போம் இருந்தாலும் நா ம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று மாவோ நேருவிடம் கிண்டலாக கூறியிருக்கி றார் அதாவது இந்தியாவுடன் திபெத் விசயமாக சண் டை போட மாட்டோம் என்பதையே மாவோ இப்படி கீழ்த் தரமாக பேசியிருந்தார்.
கடைசியில் அந்த பன்றி ஸாரி மாவோ பன்றியின் வாலை பிடித்தது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம் தான்.அதாவது வேண்டாத இந்தியாவை தண்டிக்க 1962 ல் இந்தியாவோடு சீனா போர் தொடுத்ததை கூறுகிறேன் அந்த போரில் அமெரிக்கா மட்டும் இந்தி யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருந்து இருந்தால் சீனா இந்தியாவையே சுருட்டி இருக்கும்.
ஆனால் இப்பொழுது இப்படி சீன அதிபர் கிண்டலாக கூற முடியுமா? எதிர்த்து இருப்பது நேரு என்கிற மாமாவா..இல்லையே மோடி என்கிற இரண்டாம் போதி தர்மன் அல்லவா!