December 5, 2025, 7:06 PM
26.7 C
Chennai

அட்டப்பாடி மழைக்கு எடப்பாடியை குத்தம் சொல்றது நியாயமாடா சேட்டா…?!

kerala flood 2 - 2025

கேரள மழை.. தண்ணீரும்.. கண்ணீருமாய்க் கரைந்து கொண்டிருக்கிறது.  கேரளாவிற்கு monsoon அல்லது அடை மழை புதிதான ஒன்றல்ல. ஆனால் 1924 க்கு பிறகே இப்படியொரு மழையானது, கேரளத்தை அடித்து துவைத்திருக்கிறது. இந்த மழை குறைவான இடைவெளி விட்டு அதாவது 2-3 நாள் மட்டும் இடைவெளி விட்டு..37.5 சதம் இந்த சீசனில், அதிகமாக மழை அடித்து விளையாடி இருக்கிறது.. 87.5 சதம் அதிகமாக இடுக்கியில் பெய்து ஒரு காட்டு காட்டியிருக்கிறது.

கேரளாவில், மற்றும் கொங்கனில் 7158 மிமீ மழை.. அதாவது இந்திய மழையளவில் 46 சதம் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக இடுக்கியில் ஆகஸ்டு 16 அன்று 2191 மிமீ மழை தேள் கொடுக்குபோல் கொட்டி தீர்த்துவிட்டது. இடுக்கி அணை நிரம்ப ஆரம்பிக்க..ஒன்பது கேரள மாவட்டங்களும் நீரால் மூழ்கி இருக்கிறது.. நிலச்சரிவுகள்.. வீடுகள் அழிந்து.. மக்கள் மர உச்சியில்.. சோறு தண்ணீர் என்று எதுவும் இல்லாமல்..

சுமார் 357 பேர் உயிரிழக்க, 3 லட்சம்பேர் சொந்த ஊரிலேயே அகதிகள் முகாம்களில்.. 444 க்கும் அதிகமான கிராமங்கள் தற்போது வெள்ளத்தில் சிக்கி..மொத்தம் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நாசமாகியிருக்கிறது.

ஏன் இப்படி..? என்ன ஆனது..? கடைசியில் ஏன் தமிழர்களின் மீதான கோபம் மற்றும் வன்மம்..? முதலில், இந்த கடவுளின் தேசம் காட்டான்களின் கையில் இருக்கிறது. இந்த அரசு ஒரு பட்டாலியன் SDRF அதாவது ஸ்டேட் டிஸாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்று எதுவுமே இல்லாமல், மந்தமாய் இருந்திருக்கிறது.

இப்படி ஒரு மழை பார்க்க நூறு வருடங்கள் ஆனதாம். அதாவது 1924 க்கு பின்னர்..இப்போதுதானாம். அதனால் இந்த SDRF எல்லாம் சாய்ஸில் விட்டு இருப்பார்கள் பக்கிகள்.

அதற்கு அடுத்து இருக்கும் 58 டேம்களில்..30 டேம்களில் வழியும் நிலையில் நீர் இருந்ததால்.. மடால் என திறந்து விட்டிருக்கிறார்கள். இது கடலுக்கு போகுமுன்.. கிச்சனுக்கு வந்து சோறு மீன்கறியுண்டோன்னு விசாரிக்காமலா இருக்கும்.? இந்த அறிவு எப்படி இல்லாமல் போனது என்கிறதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. சென்னை செம்பரம்பாக்கத்தை திறந்து வைத்தது.. அம்மா ஆட்சியில் நடந்த ட்ரெயிலர் என்றால்.. இது 70 எம்எம் முழு நீள திரைப்படம். ஆல்மோஸ்ட் எல்லா மாவட்டத்திலும் நீரில்..காரும் படகும் ஒரே தெருவில் போவதை பார்த்திருப்பீர்கள்.

பல ஏர்போர்ட்டுகள் முடங்கியிருக்கிறது. ஏற்கெனவே பேரிடர் குழு என்று எதுவும் இல்லை.முன்னொரு காலத்தில் அடி வாங்கிய ஒரிசா மாநிலம்.. நாயுடுவிடம் கற்ற வித்தையை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு படாலியன் தீயணைப்பு மற்றும் பேரிடர் படையை அனுப்பியிருக்கிறது.

எல்லா மாநிலங்களும் இப்படி உதவிக்கரம் நீட்டியதுமில்லாமல்.. பணம் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் வாரி வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணம் 5கோடி தந்ததுமில்லாமல் பொருட்கள், மற்றும் மீட்பு குழு என்று உதவி இருக்கிறது. எடப்பாடியை குற்றம் சொல்ல எந்த முகாந்திரமே இவர்களுக்கு இல்லை.

இதைதாண்டி அழுக்கு அரசியலை.. இந்த நேரத்திலும் கம்யூனிஸ்டுகள் அவிழ்த்து விட்டது, அவர்களின் மீதான மக்களின் கோபத்தை திசை திருப்ப உத்வியிருக்கிறது. முதலில் பணம் போதும்.. ஆட்டையை போடலாம் என்று காத்திருந்த அரசுக்கு.. இதன் வீரியம் புரிந்தவுடன் பேஜாரானது. மீட்பு குழு என்பது அவசியமானது.. அவசரமானது கூட என்ற அறிந்ததில்.. ஒரு பதற்றம் அரசிடம் தெரிந்தாலும்…அழகாய் தமிழ்நாடு மீது இதை திசை திருப்பியதில்.. வெளிநாடு வாழ் மலையாளிகள் காண்டாகி.. எடப்பாடியின் பக்கத்தில் கண்டபடி வாய்க்கு வந்தபடி, தமிழர்களையும், தமிழக அரசையும் முதல்வரையும் வசைபாடி தீர்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்.. கேரள அரசின் SOSஐ கண்டு அரசு மற்றும் தனியார், ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்கள் மீட்பை இரவு பகலாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

ராணுவமும் கப்பல் படையுமே.. ஆபரேஷன் மதாத் என்றும் 58 மீட்பு குழுக்களோடு செயலாற்றி.. 3,000 பேரை காப்பாற்றி இருக்கிறது. ஆபரேஷன் சஹயோக் என்று ராணுவமும் 3600 பேரையும், 22 வெளிநாட்டவரையும் காப்பாற்றி.. இரவு பகல் பார்க்காமல் பணியாற்றுகிறது.. ஆயிரம் வீரர்களை வைத்துக்கொண்டு இது, மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இதைத்தாண்டி மோதி, வாஜ்பேயி இறப்பின் பின் உடனே வந்து.. 600 கோடி வழங்கியது ஒரு பத்தாவது பக்கத்து மூலை செய்தியாய் மலையாளிகள் கடந்து விட்டிருக்கிறார்கள்.

நேவி கேப்டன் ராஜ்குமார் நேவல் ஹெலிகாப்டரை வைத்து 26 பேரை காப்பாற்றி யிருக்கிறார். மரங்களின் நடுவே ஹெலிகாப்டரை நடுவானில் டெலிகேட் ஆக நிறுத்தி.. ஒரே சார்ட்டியில் இதை சாதித்து காட்டியிருக்கிறார்.

கமாண்டர் விஜய், கர்ப்பவதியான பெண்ணை காப்பாற்றி சஞ்சீவனி மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார். இவர்களும் மனிதர்கள்தான்.. இவர்களுக்கும் உயிர் இருக்கிறது.. குடும்பம் இருக்கிறது.. இது தனி அலுவல்கூட கிடையாது..

இதை தாண்டி இப்படியான சேவையை பாராட்டாமல் போனாலும்.. குற்றம் சொல்லும் ஆசாமிகளுக்கு மன்னிப்பே இல்லை. ராணுவம் செய்வது பத்தாது.. அப்படி என்ன செய்கிறார்கள் என்று உளறும் லெப்ட் leaning ஜோல்னா பையர்களே..முதலில் பினராய் விஜயனிடம் கேளுங்கள்.. எவிட SDRF..? என்று..?

இரண்டு.. ஏன் தமிழ்நாடு மீது கோபம் திசை திருப்பப்பட்டது..? அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது எல்லாவித இல்லீகல் ரிசார்ட்டுகளை உடைத்து எறிந்தார். இப்போது இருக்கும் முதல்வருக்கு எல்லோரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் முல்லைப் பெரியார் அணை நீர் மட்டத்தை குறைக்க வேண்டும். தமிழகம் இந்த்நீர் மேலாண்மையை சரியாய் செய்யவில்லை என்று ட்வீட் பண்ணி விட்டு.. குற்றப் பத்திரிக்கையோடு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனதில்… அங்கு.. இதைப்பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு எதுவும் தெரியாது.. வேண்டுமானால் குறைத்துக் கொள்ளுங்கள் என முல்லைப் பெரியார் SDRF சப் கமிட்டியிடம் அறிவுறுத்த.. நீர் எல்லா மதகுகளிலிருந்தும் கிளம்பி இடுக்கி வர.. 4500 அடிதான் இந்த மதகுகளில் இருந்துமே வெளியேற்ற முடியும். வரத்தோ 30000 கன அடி.

தமிழகத்திற்கு அன்டர்கிரவுண்டு பைப்புகளால் அதிகமாக நான்கு சுரங்கம் வழி நீர் கொண்டு போகலாம்.. ஆனால் இவ்வளவுதான் வெளியேறும். அணை மட்டத்தையும் 142க்கு மேல் ஏற்ற சுப்ரீம் கோர்ட் தடை உண்டு.

ஏற்கெனவே எல்லா இடங்களிலும்.. நீர்! கேட்கவேண்டுமா? மொத்தமும் திறந்து நீர் வெளியேறி இப்போது நேராக இடுக்கிதான் வேறு வழியும் இல்லை.. இருப்பதே இந்த மதகுகள்தானே..? அதனால் தமிழக நீர் மேலாண்மையம் மற்றும் பயம் காரணம் உளறித் தொலைக்கும் சேட்டன்கள்.

கேரளாவின் வாதம்..அணை பழசு தாங்காது என்பது வேறு பொய்த்துப் போனது. அட்டகாசமாய் நீரை தேக்கி அணை கம்பீரமாய் நின்று கொண்டு இருக்கிறது. என்ன..? இங்குள்ள ரிசார்ட் உரிமையாளர்கள் நம்ம பினராய்க்கு வேண்டப் பட்டவர்கள். இப்படி வெள்ள பயத்தை உருவாக்கியதில்.. வெளிநாட்டு மலையாள சேட்டன்கள் எடப்பாடியை கழுவ.. நான் காண்டானேன். எங்கும் தண்ணீரும் கண்ணீரும்தான். அது மட்டும் மாறவேயில்லை.

இதற்கான காரணங்கள்..எனக்கு தெரிந்தவரை..

1. காட்கில் என்கிறவரின் கமிட்டி ரிப்போர்ட்டை ஆறு ஸ்டேட்டுகளும் எதிர்த்தது. (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத்.. ஆந்திரா) இப்படி இயற்கையை இயற்கையாகவே வைத்திருக்கவே முடியாது. காலம் காலமாய் இங்கு வாழும் ஆதிவாசிகளை அப்புற்படுத்திவிட்டு, காடுகளை மட்டும் வைத்து காப்பாற்ற முடியாது.. என்று சொல்லி.. ரிசார்ட்டுகளை ஆதரித்து..மலைகளை க்வாரிகளாக்கி.. கல்லை கெல்லி எடுத்தார்கள். கர்நாடகாவில் ரெட்டிகளின் கலாட்டா நமக்கு தெரியாததல்ல..

2. இப்படியான க்வாரிகளால்.. ஆற்றில் மணல் அள்ளப்படுவதால், மேகம் மழைக்காக இயற்கையாய் இணைவதும் மழையாய் மாறுவதும் மாறிப்போனதுதான் காரணம் என்று படித்தேன்.

3. மரங்களையும் காடுகளையும் அழித்தலில்.. ஒவ்வொரு வருடமும் வெள்ளம் அதிக மாகிறது அதைத்தவிர க்ளோபல் வார்மிங்தான் என்று ஐஐடி குழு ஒன்று படம்போட்டு பாகம் வேறு குறித்திருக்கிறது.

4. காட்கில் உண்மையை சொன்னதால்.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று கஸ்தூரி ரெங்கன் என்று ஒரு இஸ்ரோ விஞ்ஞானியை பிடித்து மத்யஸ்தம் செய்து ஒரு லைட் ரிப்போர்ட்டை தயார் செய்து.. அதையும் யாரும் இம்ப்ளிமென்ட் செய்த மாதிரி தெரியவில்லை. அப்புறம் எப்படி விளங்கும்..?

இப்படி எதையும் செய்யாமல் நாசம் செய்த பின் அட்டப்பாடி மழைக்கு எடப்பாடியை குற்றம் சொல்வது என்ன நியாயம்டா சேட்டா..?
So sad. God bless and save its own country.

பிரகாஷ் ராமசாமி Prakash Ramasamy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories