December 5, 2025, 4:41 PM
27.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 94): பிஸ்டலுக்கு பதில் ரிவால்வர்!

savarkar godse - 2025

சகோதரர்கள் இருவரும் இரவு உணவை ஒன்றாகச் சாப்பிட்டனர்.பிறகு நாதுராம் கோட்ஸே, இரவு தன் ரூமிற்கு திரும்பி விட்டார். வெள்ளிக்கிழமை காலையில்,நாதுராம் ,இன்னொரு பிஸ்டலோ, ரிவால்வரோ கிடைக்குமா என முயற்சி செய்தார்.ஒரு .22 போர் மேகஸின் பிஸ்டல் ஒன்றை வாங்க முடிந்தது.

ஆனால் அது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. அதை விட பெரிய போர்( துவாரம் ) இருக்கும் ரிவால்வர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.

திகம்பர் பாட்கே ஹிந்து ராஷ்ட்ரா அலுவலகத்திற்கு வந்த போது,நாதுராம் அவரிடம் கேட்ட முதல் கேள்வி,அவர் தங்களோடு வருவதென்று முடிவு  செய்து விட்டாரா என்பதுதான்.

பாட்கே தான் தயாராக இருப்பதாக கூறினார். பின்னாளில் பாட்கே நினைவு கூர்கையில், ‘’ கோட்ஸே ஒரு பிஸ்டலை எடுத்து என்னிடம் கொடுத்தார்.அதனை கொடுத்து விட்டு ஒரு பெரிய ரிவால்வர் பெற முயற்சிக்கும்படி கூறினார்.
ஒரு வேளை பெரிய ரிவால்வர் கிடைக்காவிட்டால்,என்னிடம் அவர் கொடுத்த பிஸ்டலை,பம்பாய் கொண்டு வரும்படி கூறினார் ‘’.

கடைசி நிமிடத்தில் கோட்ஸே கொடுத்த இந்த வேலையை செய்ய ஒப்புக் கொண்டார் பாட்கே.தனக்கும் ரயிலை பிடிக்க காலதாமதம் ஆகி விடும் என்று கூறவில்லை. ஏனென்றால் இதுவும் அவருக்கு ஒரு பிஸினஸ்தானே.

பிஸ்டலை கால்சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு S.D.சர்மா என்பவரைக் காண விரைந்தார் பாட்கே. இந்த சர்மாவிடம் சில வாரங்களுக்கு முன் தான் விற்ற ரிவால்வர் ஒன்று இந்த பிஸ்டலை விட பெரியதாக இருந்தது நினைவிற்கு வந்தது.

சர்மா,பிஸ்டலை பெற்றுக் கொண்டு,ரிவால்வரை கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார். ‘நான் பிஸ்டலை கொடுத்து விட்டு ரிவால்வரை பெற்றுக் கொண்டேன் ‘’ என்று பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது வாக்குமூலம் அளித்தார் பாட்கே.

’’சர்மா நான்கு தோட்டாக்களையும் ரிவால்வரோடு சேர்த்து என்னிடம் கொடுத்தார்’’என்றும் தன் வாக்குமூலத்தில் கூறினார் பாட்கே.

ரிவால்வர் .32 போர் உடையது.ஆனால் அவர் கொடுத்த தோட்டாக்கள் அதன் அறைக்குள் ( CHAMBER ) சரியாக பொருந்துவது போல் தோன்றினாலும் சற்றே அளவில் சிறியதாக இருந்தது. அது ஒரு மேகஸின் பிஸ்டலுக்கு உரியதாக இருந்திருக்கலாம்.

ஆனால் என்றைய தினம் காந்தியை கொல்வது என்று முடிவுச் செய்திருந்தார்களோ, அன்று காலைத்தான், அவை தவறான தோட்டாக்கள் என்பதை கோட்ஸேயும் நண்பர்களும் உணர்ந்தார்கள்.

பின்னோட்டத்தில்… பிஸ்டலை பாட்கேயிடம் கொடுத்த பிறகு, பம்பாயிற்கு புறப்படும் 11 மணி ரெயிலைப் பிடிக்க நிறைய நேரமிருந்ததால், தன்னுடைய பெற்றோர்களை காணச் சென்றார் நாதுராம்.

பாட்கே சர்மாவுடன் பேசி பிஸ்டலுக்கு பதிலாக ரிவால்வரை பெற்றுக் கொள்ள நள்ளிரவு ஆகி விட்டது. அதன் பிறகு பம்பாயிற்கு விடியற்காலை 2 மணிக்குத்தான் ரயில் இருந்தது. வழக்கம் போல்,மூன்றாம் வகுப்பு பெட்டி நிரம்பி வழிந்தது.

எப்படியோ ஒரு வழியாக அதற்குள்,பாட்கேயும்,சங்கர் கிஷ்டய்யாவும் முண்டியடித்து ஏறிக் கொண்டு மர பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு இரவு பொழுதை கழித்தனர்.

சங்கர் கிஷ்டய்யா,தாதர் ரெயில் நிலையத்தில் இறங்கி,ஹிந்து மஹா சபா அலுவலகத்திற்கு சென்று அங்கு பாட்கே வரும் வரை காத்திருப்பது என்று முடிவானது.

காலை 7 மணி வாக்கில்,ரயில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பாட்கேவும் இறங்கினார். அங்கே பிளாட்ஃபார்மில் நாதுராமும், ஆப்தேயும் அவருக்காக காத்திருந்தனர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories