December 6, 2025, 5:56 AM
24.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி111

patel Gandhi nehrujpg - 2025

கோபால் கோட்ஸே ,ரிவால்வருக்குள் இருக்கும் அதன் அசைக்கக்கூடிய பகுதிகளை சரி செய்து இருந்தார்.

ஆனால் அது சரியாக சுடுமா என்பதை சோதித்து பார்க்க நேரம் இல்லை.ஏனென்றால் அதற்கான காலம் கடந்து விட்டது.

அறையை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டு,அடுத்த அரை மணி நேரத்திற்கு,கையெறி குண்டுகளை தயார் நிலையில் எடுத்து வைத்தனர்.

GUN COTTON SLABS ற்குள் ப்யூஸ்களையும்,FIRING CHARGES ஐயும் பொருத்தினார்கள்.

( GUN COTTON SLAB என்பது,ஒரு பகுதி நைட்ரிக் அமிலத்துடன் மூன்று பகுதிகள் ஸல்ஃபூரிக் அமிலத்தை கலந்து,அதில் சுத்தமான பருத்தியை கரைத்து உருவாக்கப்படும் பெரிய அளவில் வெடித்து சிதறக்கூடிய ஒரு வெடிபொருள்.)

அதன் பிறகு தாங்கள் தொடுக்கவிருக்கும் ’ போர் ‘ பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள்.

இப்போது அவர்களிடமிருந்த ’ போர்’ கருவிகள்…..

சரியாகி விட்டதாக அவர்கள் நம்பிய கோபால் கோட்ஸேயின் .38 ரிவால்வர் ;

திகம்பர் பாட்கேயின் பயன்படுத்த முடியாத .32 ரிவால்வர் ;

7 விநாடிகளில் வெடிக்கக்கூடிய ஐந்து கையெறி குண்டுகள் ;

90 விநாடிகள் ப்யூஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஒரு பவுண்ட் GUN COTTON SLABS.

இவர்களில்,மதன்லால் பஹ்வா மட்டும் கையெறி குண்டுகளின் தயாரிப்பின் போது அதைக் கையாண்டிருக்கிறார்( ஆனால் வெடிக்கச் செய்ததில்லை ).

மற்றவர்களில் யாருக்குமே,ரிவால்வரை பயன்படுத்திய அனுபவம் இல்லை ; 36 வெடிகுண்டை வீசியதில்லை ; அங்கிருந்த ஆயுதங்களில்,எந்த ஆயுதத்தின் திறன் குறித்தோ,அதனுடைய வரம்புகள் குறித்தோ எதுவுமே தெரியாது.

உதாரணமாக,பாட்கே ( மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தின்படி ),முப்பது அடி தூரத்திலிருந்து காந்தியை சுட முடியுமென்று நம்பினார்.ஆனால்,அது சுடுவதில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவருக்கே சாத்தியமாகும்.

கையெறி குண்டுகளை பொறுத்தவரையில்,அவர்களின் திட்டம்,காந்தியின் அருகில் சென்று எல்லா திசைகளிலிருந்தும் வெடிகுண்டுகளை வீசுவதாகும்.

இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்,பல அப்பாவிகளையும் கொல்லும் என்று அவர்கள் உணரவில்லை.

நாதுராம் கோட்ஸே மைக்ரெயின் தலைவலி ஏற்படுத்திய பலவீனத்திற்கு இடையே அவர்களிடையே துவக்க உரையாற்றி பேசினார்.

‘’ மேற்கொண்டிருக்கும் பணியின் நியாயத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு நாம் செயல்பட வேண்டும்,வெற்றி நிச்சயம் எனும் நம்பிக்கை தேவை,ஏனென்றால் ’ இதுதான் நம் கடைசி முயற்சி ‘’ என்று கூறினார்.

அதன் பிறகு ஆப்தே பேசினார்.

அனைவரும் செயல்பட வேண்டிய விதத்தை விளக்கினார்.

’ அவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் ‘ அங்கு கூடியிருப்பவர்களிடயே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்,யார் காந்தியின் அருகில் இருக்கிறார்களோ அவர்கள் கையெறி குண்டுகளை வீசியும்,ரிவால்வரால் சுட்டும் காந்தியை கொன்று விட வேண்டும்.

அவர்களிடமிருந்த இரண்டு GUN COTTON SLABS ஐ வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் ’என்றும் கூறினார்.

அவர் கூறியதை அனைவரும் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் யாருக்குமே வெடிகுண்டுகளை கையாண்டு பழக்கமில்லாததால்,அதை எப்படி செய்வது எனும் குழப்பம் அவர்கள் மனதிலே இருந்துக் கொண்டே இருந்தது.

வெடிபொருட்கள்,மற்றும் துப்பாக்கிகள் வியாபாரம் செய்து வந்த திகம்பர் பாட்கேயிற்கு கூட அவற்றை கையாள்வது எப்படி என்று தெரியாது.

பின்னர்,

தன் வாக்குமூலத்தில் பாட்கே கூறுகையில்,
‘’ கையெறி குண்டுகள் ,GUN COTTON SLABS ,ரிவால்வர்கள்,பிஸ்டல்கள் …..இவற்றில் எதையுமே கையாண்டு எனக்கு பழக்கமில்லை.நான் கையெறி குண்டுகளை அதற்கு முன் வீசியதுமில்லை,GUN COTTON SLABS களை வெடிக்கச் செய்ததுமில்லை ‘’.

ஆலோசனை கூட்டத்தின் போது திகம்பர் பாட்கே ஆப்தேயிடம் கூறினார் :

‘’ நாம் ஏன் இரண்டு GUN COTTON SLABSகளை பயன்படுத்த வேண்டும்.ஒன்றை பயன்படுத்தினால் போதாதா ? ‘’

பாட்கே கூறியபடி ஒன்றை மட்டும் பயன்படுத்துவதென்று முடிவானது.

ஒரு GUN COTTON SLABஐ மதன்லால் பஹ்வா வெடிக்கச் செய்து கூடியிருக்கும் மக்களிடையே குழப்பத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

அதை வெடிக்கச் செய்த பிறகு,காந்தியை சுற்றி நிற்கும் தன் மற்ற நண்பர்களோடு சேர்ந்துக் கொண்டு காந்தி மீது கையெறி குண்டுகளை வீச தயாராகி விட வேண்டும் .

( தொடரும் )

காந்தி கொலையும் பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories