ஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி!

Published:

murunkai kirai - 2026

கீரை வேர்க்கடலை உசிலி

தேவையானவை:

முருங்கைக்கீரை – ஒரு கப்,

வறுத்த வேர்க்கடலை – கால் கப்,

காய்ந்த மிளகாய் – 4,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

peanut - 2026

செய்முறை:

முருங்கைக்கீரையை கழுவி சுத்தம் செய்து, ஆய்ந்து வைக்கவும். வறுத்த வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென பொடிக்கவும்.

murunkai kadalai ucili 1 - 2026

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img