உத்தராகண்ட் என அழைக்கப்படும் உத்தராஞ்சல் இந்தியாவின் வடக்கு பகுதி மாநிலமாகும். ஏராளமான இந்து கோவில்கள் மற்றும் புனித யாத்திரை மையங்கள் காரணமாக இது பெரும்பாலும் “தேவபூமி” (அதாவது “கடவுளின் நிலம்”) என்று அழைக்கப்படுகிறது.
உத்தராகண்ட் இமயமலை , பாபர் மற்றும் தேராய் பகுதிகளின் இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது . மொத்தம் 13 மாவட்டங்களைக் கொண்ட கர்வால் மற்றும் குமாவோன் என இரண்டு பிரிவுகளாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உருவாக்கப்பட்டது உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள யாத்திரை தலங்களை சிறப்பித்து 2019-ஆம் இந்திய அஞ்சல்துறை நான்கு அஞ்சல்தலைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
- விஜயகுமார் (யோகா ஆசிரியர், அஞ்சல்தலை சேகரிப்பாளர் திருச்சி)