December 5, 2025, 11:52 PM
26.6 C
Chennai

பகலில் காவலர், இரவில் எழுத்தாளர்! மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது!

madurai-police
madurai-police

*மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது.!!

மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..

தொடர் முயற்சியினால் ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர் இதுவரை 250 அனாதைப் பிணங்களை தானே முன்னினன்று நல்லடக்கம் செய்துள்ள சேவையை பாராட்டியும், மாநகரில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தியமையை பாராட்டியும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மதுரை மாநகர கூடுதல் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இவருக்கு பணப் பரிசளித்து பாராட்டியுள்ளார்.
ஓய்வு நேரத்தில் புத்தக வாசிப்பிற்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டதினால் 2011 ஆண்டு திருச்சி பாரதிதாசன் கல்லூரியினால் ‘தமிழ்நாடு அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் பெண் உரிமைகளுக்கான பங்கு’ என்ற தலைப்பில் சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சித் தொகுப்பிற்காக வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய இந்திய ஆய்வியல் நிறுவனமும் இணைந்து 500 அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை சுயசரிதையை நூலாக வெளியிட்டுள்ளது. அங்கு வைத்து இவரது சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பணி நிறைவு காலத்தின் பின்னர், தனித் தமிழ் ஆர்வமுடைய தனது தாயாரின் பெயரான திருமதி K.R. செல்லம்மாள் உலகத் தமிழாராய்ச்சி மையம் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி பல அறிஞர்களை இணைத்து ஆண்டு தோறும் கருத்தரங்கங்கள் நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பயன் பெற அனுமதிப்பது, மாணவ/மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க உதவுவது என்று பல ஆக்கபூர்வமான செயல்களுக்காக இப்போதே 4000ற்கும் மேற்பட்ட புத்தகங்களை தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்.

இவரது அனைத்து ஆக்கபூர்வமான சேவைகளையும் பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொதுத் தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை MD, நிறுவனர் முனைவர்.நிமலன் நீலமேகம், வழக்கறிஞர் ராம்பிரபாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந் நிறுவனத்தின் பல நாடுகளின் தலைவர்கள், மாநில, மண்டல ,மாவட்ட மற்றும் தாலுகா ரீதியிலான தலைவர்கள் என பலரும் விருது பெற்ற காவல் உதவி ஆணையரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories