
தென்னகத்தையும் வடபுலத்தையும் எப்பாடு பட்டாவது பிரிக்க வேண்டும் என முயல்கின்றனர், மொழி அடிப்படையில், கலாசார அடிப்படையில். ஆனால் அதற்குச் சங்கத நூல்களும் இடந்தரவில்லை, தமிழ் நூல்களிலும் இடமில்லை, வரலாறும் அவ்வாறு அமையவில்லை.
தெற்கில் தமிழகத்தில் வாழ்ந்த திராவிடரையே ராமாயணம் அரக்கராகச் சித்திரிக்கிறது எனும் வாதம் எடுபடாது.
கோதாவரிக்குத் தெற்கில் இராமபிரான் யாரையும் வதம் செய்யவில்லை. கபந்த – கர -தூடண வதம் முடிந்த பின்னர் சேதுக்கரையில் கடலரசனிடம் கொண்ட சினத்தால் அண்ணல் ஒருமுறை வில்லுயர்த்துகிறார், அவ்வளவுதான்.
மொழி அடிப்படையில் பார்த்தால் வடபுலத்திலும் பல மொழிகள் உள்ளன, ஒரே மொழி அங்கில்லை. அங்கேயும் பழக்க வழக்கங்களில் பல மாறுபாடுகள். தெற்கில் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லை.
வைணவ நூல் தமிழின் தொன்மையை ’ஆகஸ்த்யம் அநாதி’ என அறுதியிடுகிறது.
விந்தியம், வேங்கடம் போன்ற மலைத்தொடர்கள் பாரத நிலப்பரப்பைப் பிரித்தாலும் இங்கிருந்த மக்கள் பிரிந்து வாழவில்லை.
ஆன்மிகமும், கல்வியும், வணிகமும் மக்களை இணைத்தே வைத்தன. இமயமலை மறை முனிவர்களுக்கு இடமளித்தது போலவே தெற்கின் மலயமும், மஹேந்திர கிரியும் முனிவர்க்கு இடமளித்தன.
பரசுராமர் மேற்குக் கடற்பகுதியில் நில மீட்புச் செய்தார்; விதுரரும், பலராமரும் தென்னகத் தலங்களுக்கு யாத்திரை செய்தனர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் இராமபிரானைச் சொல்கின்றன. மணிமேகலை பரசுராமனைச் சொல்கிறது.
புராணங்கள் பரந்தாமனின் முதல் அவதாரமும், இறுதி அவதாரமும் பாண்டியநாட்டில் என்கின்றன. இங்கு பரசுராமர் வேள்வி இயற்றினார்; மாமன்னர்களும் வேள்வி நிகழ்த்தியுள்ளனர்.
வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் மலயத்தை, கபாடபுரத்தைச் சொல்கிறது; மஹாபாரதம் பாண்டியரைச் சொல்கிறது. மஹாகவி காளிதாஸர் ரகுவம்சத்தில் பாண்டியர் பெருமையைக் கூறுகிறார்.
ராவணன் பாண்டியரோடு சமாதான ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் எனவும் வடநூல் வாயிலாக அறிகிறோம். பிற்காலச் செப்பேடும் சான்றாக அமைகிறது.
தளவாய்புரச் செப்பேடு [9ம் நூற்0] –
”அகத்தியனோடு தமிழாய்ந்தும், மிகத் திறனுடைய வேந்தழித்து, தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன் படை முழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும்….”
தமிழகம் ஆழ்வார்களுடையது; அரி மாதவனுடையது. சொறிநாய்கள் துண்டாட முடியாது.



