புலிகளின் வாழ்க்கை சிக்கலானது. புலிகள் வளரும் நிலையில் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தனிக்குடித்தனங்கள் அனுப்படுகின்றன. பெரும்பாலும் புலிகள் தங்கள் தாய் வாழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். ஆனாலும் இங்கே அதிகார போட்டி, யார் பலசாலி என்கிற ஆளுமை சண்டை அதிகம். தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் பிற புலிகள் நுழைவதை விரும்புவதில்லை. யார்பலசாலி என்ற சண்டையில் இளம் வாலிப புலிகளிடம் வயதான புலிகள் சிக்கி உயிர் இழப்பது அதிகம். ஒருவேளை மானம் ரோஷம் வெட்கம் பார்க்காமல் தான் தோற்றுவிட்டதாக தரையில் முதுகை வைத்து கால்களை மேலே தூக்கினால் சரி.. சரி… தொலைஞ்சுபோ என்று இரக்கம் காட்டப்படுகிறது. அதன் பிறகு அந்த எல்லையில் வாழலாம். உணவுகளை பகிர்ந்து உண்ணலாம். ஆனால் காதல் வயப்பட்டு பிற பெண்புலிகளை சீண்டக்கூடாது. வாலைச்சுருட்டிக் கொண்டு வாழவேண்டும். இல்லா விட்டால் சங்குதான். பெண்புலிகள் தங்கள் எல்லையில் பிற பெண்புலிகள் வந்தாலும் கண்டு கொள்வதில்லை. சகிப்புத்தன்மை அதிகம்.
Popular Categories



