
கொள்ளு சுகியன்
தேவையானவை:
கொள்ளுப்பொடி – ஒரு கப்,
வெல்லம் – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
லக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
மைதா – கால் கப்,
எண்ணெய் – பொரிக்க,
உப்பு – கால் டீஸ்பூன்.
செய்முறை:

கொள்ளை குக்கரில் வேகவைத்து, நீரை வடித்து ஆறவைத்து, மிக்ஸியில் பவுடராகத் திரிக்கவும்.தேங்காய்த் துருவலை வாணலியில் லேசாக வறுக்கவும். அடுப்பில் வாண லியை வைத்து வெல்லம் சேர்த்து, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி, கொள்ளுப்பவுடர், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து, பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் (மைதா மாவு தீய்ந்துவிடாமல்) பொரித்தெடுக்கவு