
பிரெட் – பனீர் பால்ஸ்
தேவையானவை:
பனீர் – 100 கிராம்,
பிரெட் தூள் – 75 கிராம் (பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக் கவும்),
பால் பவுடர் – 25 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
முந்திரி (பொடித்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்,
செர்ரி/டூட்டி ஃப்ரூட்டி – அலங்கரிக்க.
செய்முறை:

பனீரை துருவவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பிசுபிசுப்புப் பதம் வந்ததும் அதில் துருவிய பனீர் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும்.
அத்துடன் பால் பவுடர், பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு பிரெட்தூள் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும். செர்ரி/டூட்டி ஃப்ரூட்டி தூவி அலங்கரிக்கலாம்.